OUR CLIENTS
கால்களின் கவர்ச்சிக்கு டிப்ஸ்
கால்களின் கவர்ச்சிக்கு டிப்ஸ் Posted on 15-Jun-2018 கால்களின் கவர்ச்சிக்கு டிப்ஸ்

நடை, உடை, பாவனைகள் நவீன யுகத்தில் பல்வேறு பரிமாணங்களைப் பெற்று வருகிறது. இளம் யுவதிகளுக்கு கவர்ச்சியான கால்கள் தேவையாக மாறி இருக்கிறது. மனித உடம்பில் கால்கள் கவனிப்புகளை அள்ளத் தொடங்கியிருக்கிறது.

கால்கள் மூலம் கண்களை கவர்ந்து இழுப்பதற்கு இளம் பெண்களின் பிரயாசைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பருவ நிலை மாற்றத்தால் திடீரென ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. இப்போது கால்கள் வறண்டு போய் விட்டன.ஒரு புறம் சொறியுடன் படை தோன்ற மற்றொரு புறம் செதில் செதிலாக தோல்கள் உரிந்து கொண்டிருக்கிறது. அறையில் உட்கார்ந்து ஒரே அழுகை, கவலை வெளியில் செல்ல முடியாத வேதனையில் தவிக்கிறது இன்றைய இளைய தலைமுறை. இதற்கு தீர்வு காண ஏழு கடல், ஏழு மலை தாண்ட வேண்டிய அவசியம் இல்லை. அடுக்களைக்குள் நுழையுங்கள் உங்கள் கவலை தீரும். 10 பொருட்களை நாங்கள் பட்டியிலிட்டுள்ளோம். அதன் பயன்பாடுகள் உங்களையும், உங்கள் தோற்றத்தையும் பழைய நிலைக்கு கொண்டு வந்துவிடும்.

கற்றாழை ஜெல் தோலை மிருதுவாக்குவதில் கற்றாழை ஜெல் நிகராக எந்தப் பொருளையும் பரிந்துரைக்க முடியாது. உடலுக்கு ஊட்டமளிப்பதோடு, உற்சாகத்தையும் பெருக்கி ஆயிரம் ஆயிரம் மாற்றங்களை சாத்தியப்படுத்தக்கூடியது. கால்களை அழகாக மிளிர வைக்கும் திறனைப் பெற்ற கற்றாழை ஜெல், தோல்களைச் செம்மைப்படுத்துவதற்கு ஒரு அற்புதமான மருந்து. நாள்தோறும் உங்கள் கால்களில் கற்றாலை ஜெல் பயன்படுத்துங்கள் உங்களிடம் இந்திரலோகத்து சுந்தரி கூட தோற்றுப் போவாள் பேக்கிங் சோடா கால்கள் வறண்டு போகிறது. செதில் செதிலாக உரிகிறது. என்ன செய்யப் போகிறேன் என்று கப்பல் கவிழ்ந்த மாதிரி கன்னத்தில் கை வைக்காதீர்கள். கவலை வேண்டாம். இயற்கையான மென்மையை வழங்குவதோடு, பிரச்சினைகளை முழுமையாக தீர்க்கக்கூடிய அற்புதமான மருந்தாக பேக்கிங் சோடா இருக்கவே இருக்கிறது. குளிர்ச்சியுடன் அனைத்து மருத்துவ குணங்களையும் கொண்ட இது, உடனடி நிவாரணியாகத் திகழும். பேக்கிங் சோடாவை தினந்தோறும் தடவ, கால்கள் தங்கத்துக்கு நிகராகப் பளபளக்கும். இப்போது தரையில் நடக்கக்கூட நீங்கள் வெட்கப்படுவீர்கள்.

வெள்ளரி கால்கள் மரமரத்துப் போனதா? வறட்டுத்தனமான தோல்கள் உங்களை பாடாய்படுத்துகிறதா? இதற்கு ஏன் இவ்வளவு கோபம். வெள்ளரி பானத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலில் உள்ள பிரச்சினைகளுக்கு பூரண குணமளிக்கும் ஆற்றலைப் பெற்றது. உடனடியாக உங்கள் கால்களில் புத்துணர்ச்சியைத் தோற்றுவிக்கும்.தோல்களில் ஏற்பட்டுள்ள மங்கலான நிறத்தை விரட்டி ஒருவித பிரகாசத்தை ஏற்படுத்தும். இப்போது பொது இடங்களில் நடக்கலாம், ஓடலாம், ஆடலாம். பல கண்கள் உங்கள் கால்களைத் தான் பார்க்கும்.

தேன் தேனில் உள்ள ஊட்டச்சத்தையும், தோல்களுக்கு அது பலனளிக்கும் என்பதை நீங்கள் முன்னெப்போதும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அழகான, வசீகரிக்கும் கால்கள் உங்களுக்கு கிடைக்கப்பதற்கு இது உதவுகிறது. கடவுளுக்கு நிகரான மகிமையும், தோல்களை பளபளக்கச் செய்யும் ஆற்றலும் பயன்படுத்துவோரை வியப்பில் ஆழ்த்தக்கூடியது. ஒரு தடவை நீங்கள் அதனை பயன்படுத்தத் தொடங்கி விட்டால் தேனுக்கு அடிமையாகி விடுவீர்கள். பிறகு எல்லாமே இனிமையாகத்தான் நடக்கும்

Label