OUR CLIENTS
மனு தர்மத்துடன் நடந்துகொள்ளும் துயர் துடைப்பு வட்டாட்சியர்!மனு தர்மத்துடன் நடந்துகொள்ள புரோக்கர்களுக்கு அறிவுரை
மனு தர்மத்துடன் நடந்துகொள்ளும் துயர் துடைப்பு வட்டாட்சியர்!மனு தர்மத்துடன் நடந்துகொள்ள புரோக்கர்களுக்கு அறிவுரை Posted on 15-Jun-2018 மனு தர்மத்துடன் நடந்துகொள்ளும் துயர் துடைப்பு வட்டாட்சியர்!மனு தர்மத்துடன் நடந்துகொள்ள புரோக்கர்களுக்கு அறிவுரை

காட்பாடி, ஜூன் 15-

காட்பாடி தாலுகா அலுவலகத்தில் புரோக்கர்கள் வலம் வந்த வண்ணம் உள்ளனர். மனு தர்மத்துடன் நடந்துகொள்ளுமாறு புரோக்கர்களுக்கு, துயர் துடைப்பு வட்டாட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார். 

காட்பாடி தாலுகா அலுவலகத்தில் ÔபÕ வைட்டமின் கொடுத்த பிறகுதான்  விண்ணப்பப் படிவம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக பகீர் புகார் எழுந்துள்ளது. காட்பாடி தாலுகா அலுவலகம் புரோக்கர்கள் வசம் உள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

வேலூர்  மாவட்டத்தில் காட்பாடிதான் வசூல் வேட்டையில் நெம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது. காட்பாடி தாலுகா அலுவலகத்தில்தான் புரோக்கர்கள் அதிகளவில் வலம் வந்தவாறு உள்ளனர். எதற்கெடுத்தாலும் இங்கு பணியாற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் புரோக்கர்களை பார்த்து பணிகளை முடித்துச் செல்லுமாறு கூறிவருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் துயர் துடைப்பு வட்டாட்சியர் எதற்கெடுத்தாலும் புரோக்கர்களின் தொலைபேசி எண்களை கொடுத்து தொடர்பு கொள்ளுமாறு கூறிவிட்டு தமக்கு எதுவுமே தெரியாதது போன்று இருந்து கொள்கிறார். அந்த புரோக்கர்கள் கொடுக்கும் பணிகளை மட்டும் விரைந்து முடித்துக் கொடுத்து விடுகிறார். ஆனால் முறையாக பலர் அனுமதி கையொப்பம் பெற்றுக் கொண்டு வந்தாலும் அந்த விண்ணப்பத்தை ஏதாவது சாக்கு போக்குச் சொல்லி நிராகரித்து விடுகிறாராம்.  
விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகை ஆதரவின்றி தவிக்கும் முதியோர்களுக்கு ஓய்வூதியம் (ளிகிறி) என வழங்கிவருகிறது தமிழக அரசு.  

பலர் இன்று தங்கள் பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டும், கைவிடப்பட்டும் சிரமத்தில் மூன்று வேளை உணவுக்கே கஷ்டப்பட்டு வருவதை பார்த்து முதியோர் ஓய்வூதியம் கொடுத்து வருகிறது. இதற்காக தாலுகா அலுவலகம் தோறும் ஒரு துயர் துடைப்பு வட்டாட்சியரை நியமித்து அந்த பணிகளை மேற்கொள்ளச் செய்துள்ளது. ஆனால் பிச்சை எடுத்த பெருமாளிடம் அதை பிடுங்கி தின்ற அனுமார் என்ற கதையை வருவாய்த்துறையினர் பின்பற்றி நடந்து வருகின்றனர்.

ஆதரவின்றி தவிக்கும் முதியோர்கள், தங்களுக்கு ஓய்வூதியம் வேண்டி பலர் விண்ணப்பிக்கின்றனர். ஆனால், அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. வசதியானவர்களுக்கும், அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்குமே ஆதரவற்ற முதியோர்கள் ஓய்வூதியம் (ளிகிறி)  அளிக்கப்படுகிறது. புரோக்கர்களின் வாயிலாக ஒவ்வொரு விண்ணப்பமும் பெறப்படுகிறது. ஒவ்வொரு ஓஏபி விண்ணப்பத்துக்கும் ரூ.3000 வாங்குமாறு புரோக்கர்களுக்கு அறிவுறுத்தப் படுகிறது. மனுதர்மத்துடன்  ரூ.1000 புரோக்கர் கமிஷன், ரூ.2000 துயர் துடைப்பு வட்டாட்சியர் என விகிதாசார அடிப்படையில் “ப” வைட்டமின் பெறுகின்றனர். ஒரு ஓஏபி மனுவுக்கு ரூ.3000க்கு மேல் வாங்கக்கூடாது என்று புரோக்கர்களுக்கு கறாராக ஆணை பிறப்பித்துள்ளார் நம்ம துயர் துடைப்பு வட்டாட்சியர். இவ்வாறு மனு தர்மத்துடன் நடந்துகொள்ளுகிறார் துயர் துடைப்பு வட்டாட்சியர் என்றால் மிகையாகாது. இவரது மனு தர்ம போதனை ஏற்று புரோக்கர்கள் ஒவ்வொரு ஓஏபி மனு மீது ரூ.3000 கொடுத்தால் மட்டுமே ஓஏபி பெறமுடியும். 

இதில் கொடுமை என்னவென்றால் ஓஏபி பெறுபவர்கள் உண்மையில் ஆதரவற்றவர்களாக, பென்ஷன் வாங்குபவர்களாக உள்ளனர். உண்மையில் ஆதரவற்ற முதியவர்கள், பிள்ளைகள் இல்லாதவர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள், ஓஏபி மனுவுக்கு ரூ-.3000 கொடுக்க தகுதியில்லாதவர்களது ஓஏபி விண்ணப்பத்தை நிராகரிக்கின்றனர் என்கின்றனர் பொதுமக்கள். 
இதற்கு ஒரு வாய்ப்பு அளிக்கிறேன் என்று துயர்துடைப்பு வட்டாட்சியர் முதியோர்களிடம் விளக்கி கூறுவது, ரூ.3000 பணம் தர முடியவில்லை என்றால் பரவாயில்லை. 

5 மாதத்துக்கான தொகையை புரோக்கர் வாங்கி கொள்வார். அதில் வட்டாட்சியருக்கு ரூ.3000, புரோக்கருக்கு ரூ.2000 என்று பகிர்ந்து கொள்கிறோம். நீங்கள் கையெழுத்தோ அல்லது கைநாட்டோ வைத்து விட்டு சென்று விட வேண்டும். 6வது மாதத்தில் இருந்து தலா ரூ.1000 பெற்றுக் கொள்ளலாம். இதற்கு சம்மதமா என கேள்வி கேட்கிறார் நியாயமான வட்டாட்சியர். 

ஒரு முதியோர் தான் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாக கூறி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் சான்று வாங்கி வந்து துயர் துடைப்பு வட்டாட்சியரிடம் கொடுத்தால் அதை நிராகரித்து விட்டு பணம் கொடுப்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதுகுறித்து அவரை நேரடியாக தொடர்பு கொண்டு கேட்டால், நான் வசூல் செய்யும் பணம் மேல்மட்டம் வரை செல்கிறது என்று கூலாக பதில் அளிக்கிறார். உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள், எங்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்று தெனாவெட்டாக பதில் கூறுகின்றார் இந்த பொறுப்பான அலுவலர்.

ஏனெனில் காட்பாடி வட்டாட்சியராக பணியாற்றும் ஜெயந்தி, அலுவலகத்தில் என்ன பணிகள் நடக்கிறது, எப்படி நடக்கிறது என்று கண்டு கொள்வதே இல்லை. இதனால் தான்தோன்றித்தனமாக பணிகளை செய்யத் தொடங்கி விட்டனர் சக அலுவலர்கள். அடிக்கடி இவர் இருக்கையில் அமர்வதே இல்லை என்ற குற்றச்சாட்டும் இவர் மீது கூறப்படுகிறது. அருகில் உள்ள ஹோட்டல்களுக்கு சென்று தேநீர் அருந்துவது, பழச்சாறு அருந்துவது என்று பொழுதை கழித்து விட்டு புரோக்கர்கள் வசூல் செய்து தரும் பணிகளை மட்டும் கனக்கச்சிதமாக முடித்து தருகிறார் இந்த பொறுப்பான அதிகாரி. மாவட்ட நிர்வாகம் இதுபோன்று பொறுப்பின்றி லஞ்சத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தும், புரோக்கர்களை ஏவிவிட்டு பணியாற்றும் அலுவலர்கள் மீது ஈவு இரக்கமின்றி துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும். பல முதியோர் படிக்கட்டுகள் ஏற முடியாமல் மூச்சுத்திணறலுடன் மாடி ஏறி வந்தால் அவர் இருக்கையில் இல்லை. மாலை 4 மணிக்கு மேல் வா என்று அங்குள்ள சக ஊழியர்கள் சொல்லி வயதான முதியோரை திருப்பி அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதை கண்கூடாக நின்று பார்த்தால் கல்லும் கரையும், ஏன் நெஞ்சை ஈரமாக்கி விடும் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மையாகும். முதியோரை காலம் தாழ்த்துவது, திருப்பி அனுப்புவது, அலைகழிப்பது போன்ற கொடிய செயல்கள் இங்கு தினமும் அரங்கேறுகின்றன. அவர்களை நடையாய் நடக்க வைத்து நோகடிப்பதை பலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். 

ரூ. 3 ஆயிரம் கொடுத்தால் போதும் அந்த புரோக்கர், வசதி படைத்தவராக இருந்தால் கூட பரவாயில்லை அவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் வாங்கி தந்து விடுகிறார். இதன் பின்னணியில் அந்த ரூ.3 ஆயிரத்தில் ரூ.2 ஆயிரம் அதிகாரிக்கும், ரூ.ஆயிரம் புரோக்கருமாக பங்கு போட்டுகொள்கின்றனர். இதுதான் ஜனநாயக நாடா, நேர்மை, உண்மை, சத்தியம் இருக்கிறதா என்ற கேள்வி பலரது மனதில் எழுகிறது. ஒருவர் பெரிய பணக்காரராக இருந்தாலும் ஓய்வூதியம் கிடைத்துவிடுகிறது. இது முறையா? எப்படி அந்த துயர் துடைப்பு வட்டாட்சியர் ஓய்வூதியம் வழங்கலாம் என்று உத்தரவு வழங்குகிறார். மனசாட்சியை அடகு வைத்து விட்டு பணியாற்றினால் ஆண்டவன் கூட மன்னிக்க மாட்டார். வாழ்ந்து மறையும் காலத்தில் உள்ள முதியோர்களுக்கு செய்யும் பச்சை துரோகம்தான் இந்த இழிசெயல் ஆகும். இனியாவது அரசு அலுவலர்கள் திருந்துவார்களா?. லஞ்சம் புரையோட காரணமாக உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும். 

தங்களது உயிரை கையில் பிடித்துக் கொண்டு பல முதியோர் நம்பிக்கையுடன் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தால் அவர்களுக்கு கிடைப்பது வெறும் ஏமாற்றம் மட்டுமே என்றுதான் சொல்ல வேண்டும். பலர் ஆண்டுக்கணக்கில் நடையாய் நடந்து கொண்டுள்ளனர். இதுபோன்ற முதியோரை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பயன்பெற வழிவகை செய்ய வேண்டும். அரசு தரும் நல உதவி உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள்தான் பலனடைய வேண்டும். இதுபோன்ற அதிகாரிகளால் அரசுக்கும், அந்த திட்டத்துக்கும் அவப்பெயர்தான் வந்து சேரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இனிவரும் காலங்களிலாவது உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் கிடைக்க மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும். முதியோர் ஓய்வூதியம் வழங்கும் பொறுப்பான பணியை கண்காணிக்கும் அலுவலர்கள் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்குமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label