OUR CLIENTS
விருத்தாசலம்-&பரங்கிப்பேட்டை சாலை இரண்டாக பிளந்தது! தரமற்ற முறையில் போடப்பட்டதே காரணம்!
விருத்தாசலம்-&பரங்கிப்பேட்டை சாலை இரண்டாக பிளந்தது! தரமற்ற முறையில் போடப்பட்டதே காரணம்! Posted on 15-Jun-2018 விருத்தாசலம்-&பரங்கிப்பேட்டை சாலை இரண்டாக பிளந்தது! தரமற்ற முறையில் போடப்பட்டதே காரணம்!

விருத்தாசலம், ஜூன் 15-

விருத்தாசலம்&&பரங்கிப்பேட்டை சாலை பணியானது தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தரம் உயர்த்தியும், மாநில நெடுஞ்சாலை மூலமாகவும் உலக வங்கி உதவியுடன் கடந்த 2015ல் துவங்கப்பட்டது.

இந்த சாலை பணியின் ஒப்பந்தத்தை பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவனம் எடுத்து வளையமாதேவியில் முகாமிட்டு சாலை பணிகளை செய்து வருகின்றனர். இப்பணிக்கான ஒப்பந்த காலமானது இந்தாண்டு ஜனவரி மாதத்துடன் முடிந்து விட்டது. இதனால் சாலை முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. மேலும் சாலை அகலப்படுத்தும் பணி, பாலங்கள் பராமரிப்பு பணி என எவ்வித பணியும் நடைபெறவில்லை. பொதுமக்கள், அரசியல் கட்சியினர் போராட்டத்துக்கு பிறகு கண் துடைப்புக்காக பேட்ச் ஒர்க் மட்டும் நடந்து வருகின்றது. இதனிடையே விருத்தாசலம்&பரங்கிப்பேட்டை இடையே உள்ள தர்மநல்லூர் கிராமத்தின் அருகே புதியதாக போடப்பட்ட சாலையில் பிளவு ஏற்பட்டு, சாலை இரண்டாக கிழிந்துள்ளது. 

இந்த சாலை பணிக்காக ரூ.162 கோடிக்கு மேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சாலை போடப்பட்ட 2 ஆண்டுகளிலேயே இப்பிளவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் கூறும் போது, இந்த சாலை பணியில் பல கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த சாலையை ஒப்பந்தம் செய்த நிறுவனம் சாலை பணியை முழுவதுமாக முடிக்காமல், விகேடி சாலைக்கு புதிய ஒப்பந்தம் செய்து வருமானம் ஈட்டும் நோக்கில் இறங்கியுள்ளதாக தெரிகிறது. விருத்தாசலம்& பரங்கிப்பேட்டை மாநில சாலை பணியை முடிக்காமல், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதும், நகாய் வசம் ஒப்படைக்கப்பட்டதுமான விகேடி சாலை பணியில் ஆர்வம் காட்டி வருகிறது. விருத்தாசலம் பரங்கிப்பேட்டை சாலை பணியை முடிப்பதற்குள் எத்தனை உயிர் இழப்புகள், எத்தனை வாகன விபத்துகள் நடைபெறும் என்பது தெரியாது என்றனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இச்சாலை பணியை விரைந்து முடிக்கவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Label