OUR CLIENTS
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கங்களாக்க நடவடிக்கை எடுக்கப்படும்!
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கங்களாக்க நடவடிக்கை எடுக்கப்படும்! Posted on 18-Jun-2018 நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கங்களாக்க நடவடிக்கை எடுக்கப்படும்!

புதுடெல்லி, ஜுன் 18-

மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் நான்காவது ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில், ஜனாதிபதி மாளிகையில் நேற்று காலை 10:00 மணியளவில் தொடங்கியது. 

மாலைவரை நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ஜேபி.நட்டா, மேனகா காந்தி ஆகியோரும் அனைத்து மாநில முதலமைச்சர்களும், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்களும், மத்திய அரசின் முக்கிய துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்திற்கு தலைமைதாங்கிய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இதில் பேசிய அவர்,
”கடந்த 2017&18 நிதியாண்டின் இறுதி காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக ஆரோக்கியமான நிலையில் இருந்தது. வரும் 2020ஆம் ஆண்டுக்குள் புதிய இந்தியா என்ற இலக்கினை நாம் அடைய வேண்டும். அப்படி அடையவேண்டும் என்றால் நமது பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கங்களாக அதிகரிக்க வேண்டும். அதற்கு சில முக்கியமான நடவடிக்கைகளை எடுக்கப்படவேண்டும். அவை கண்டிப்பாக மேற்கொள்ளப்படும்” என்று பிரதமர் மோடி கூறினார்.

மேலும், ”ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் சுகாதார மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின்கீழ் 10 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ சிகிச்சை பாதுகாப்பு கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

”வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும். நமது நாட்டில் திறமைகளுக்கும், வளங்களுக்கும் எந்த குறையும் இல்லை. கடந்த கால மத்திய அரசு தனது ஆட்சிக்காலத்தின் கடைசி நிதியாண்டில் அளித்ததைவிட மாநிலங்களுக்கு இந்த நிதியாண்டில் 6 லட்சம் கோடி ரூபாய் அதிகமாக அளிக்கப்படும். மத்திய அரசு மாநிலங்களுக்கு ரூ. 11 லட்சம் கோடிக்கும் மேல் வழங்கும்” என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.

Label