OUR CLIENTS
போர்நிறுத்தம் முடிவு, ராணுவ நடவடிக்கைகளை தொடர ராஜ்நாத் உத்தரவு!
போர்நிறுத்தம் முடிவு, ராணுவ நடவடிக்கைகளை தொடர ராஜ்நாத் உத்தரவு! Posted on 18-Jun-2018 போர்நிறுத்தம் முடிவு, ராணுவ நடவடிக்கைகளை தொடர ராஜ்நாத் உத்தரவு!

ஸ்ரீநகர், ஜுன் 18-

ஜம்மு காஷ்மீரில் ரம்ஜானை முன்னிட்டு பயங்கரவாதிகளை வேட்டையாடும் படையினருக்கு அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தம் நீட்டிக்கப்படாது. போர் நிறுத்தம் முடிந்தது, பாதுகாப்பு படைகள் நடவடிக்கைகள் இனி தொடங்கும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரம்ஜான் நோன்பு காலத்தை முன்னிட்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி எல்லையில் அண்டை நாட்டு ராணுவத்துடன் சண்டையிடுவதை தற்காலிகமாக நிறுத்திவைத்து உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.
எனினும், பாதுகாப்பு படையினர் மீது சில இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் படையினரும் அதற்கு தக்க பதிலடி கொடுத்தனர். ரம்ஜான் பண்டிகை முடிந்த நிலையில், ரம்ஜான் நோன்பு காலத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் படையினருக்கு அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தம் நீட்டிக்கப்படாது. ராணுவ வீரர்களின் நடவடிக்கைகள் இனி தொடரும்” என்று உள்துறை அமைச்சர் உத்தரவிட்டார்.

”வன்முறை தாக்குதல்களை தடுக்கும் வகையில் காஷ்மீரில் அமைதியான சூழல் உருவாவதை உறுதிசெய்யும் விதத்திலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்பு படைகள் இன்று(நேற்று) முதல் தொடரலாம்” என மத்திய உள்துறை அமைச்சகர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

Label