OUR CLIENTS
சித்துராஜபுரம்-பூலாவூரணி சாலை பல்லாங்குழியான அவலம்!
சித்துராஜபுரம்-பூலாவூரணி சாலை பல்லாங்குழியான அவலம்! Posted on 18-Jun-2018 சித்துராஜபுரம்-பூலாவூரணி சாலை பல்லாங்குழியான அவலம்!

சிவகாசி, ஜூன் 18-

சித்துராஜபுரம்& பூலாவூரணி சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன  ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அருகே  3  கி.மீ தொலைவில்  உள்ளது  பூலாவூரணி கிராமம். இந்த கிராமத்திலிருந்து சித்துராஜபுரம் செல்ல 4 கி.மீ தூரம் கிராம சாலை கடந்த பல  ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலையில் எவ்வித  சீரமைப்பு பணிகளும்  நடைபெறாததால் குண்டும், குழியுமாக உள்ளது.  சித்துராஜபுரத்தில் இருந்து 2 கி.மீ தூரம் வரையுள்ள விளாம்பட்டி சாலை  விலக்கு வரை தற்போது சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. ஆனால் விளாம்பட்டி விலக்கில்  இருந்து பூலாவூரணி செல்லும் 2 கி.மீ தூர சாலை சீரமைக்கப்படாமல்  உள்ளது. 

இந்த சாலையில் பட்டாசு ஆலைகள் அதிகம் உள்ளது. பட்டாசு ஆலைகளில்  ஏதேனும் விபத்து நடந்தால்  தீயணைப்பு, ஆம்புலன்ஸ் வாகனம் விரைந்து செல்ல  முடியாத நிலையில் சாலை மிக மோசமாக உள்ளது. பட்டாசு ஆலைகள் அதிகம் உள்ள  கிராம சாலைகள் அனைத்தும் தற்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால்  பூலாவூரணி சாலை மட்டும் பல ஆண்டுகளாக சீரமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.  இந்த சாலையில் உள்ள பாலங்களும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால்  இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளது.  சித்துராஜபுரத்தில் இருந்து பூலாவூரணிக்கு ஏராளமான தொழிலாளர்கள்  வாகனங்களில் வந்து செல்கின்றனர். சாலை மோசமாக உள்ளதால் வாகனங்கள் அடிக்கடி  பழுதடைகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.  பட்டாசு ஆலைகள் அதிகம் உள்ள இந்த சாலையை சீரமைத்து பழைய பாலங்களை அகற்றி  புதிய மேம்பாலங்கள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Label