OUR CLIENTS
பயணிகள் இல்லாமல் இயக்கப்படும் அரசு பஸ்கள்!
பயணிகள் இல்லாமல் இயக்கப்படும் அரசு பஸ்கள்! Posted on 18-Jun-2018 பயணிகள் இல்லாமல் இயக்கப்படும் அரசு பஸ்கள்!

சென்னை, ஜூன் 18-

 தமிழகத்தில் அரசியல்வாதிகள் பஸ்களில் ஆதிக்கம் செலுத்துவதால் அரசு போக்குவரத்து கழக பஸ்களின் சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டன. இவற்றில், 4,500க்கும் அதிகமான பஸ்களும் 100க்கும் மேற்பட்ட வழித்தடங்களும், மூன்று மாதங்களில் ரத்து செய்யப்பட்டு உள்ளன. நஷ்டங்களை தவிர்க்கவே பஸ்களை நிறுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறியதாவது: கரூர், ஈரோடு, நாமக்கல்,சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினருக்கு சொந்தமான 1,000க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் எல்லாம் அவற்றுக்கென ஒதுக்கப்பட்ட வழித்தடத்தில் செல்லாமல் நேர் வழி என்ற பெயரில் முக்கிய நகர எல்லைக்குள் மட்டுமே இயங்குகின்றன. இதனால் நேர விரயம் தவிர்க்கப்படுவதால் அந்த பஸ்களில் மக்கள் விரும்பி பயணிக்கின்றனர்.

மேலும் தனியார் பஸ்களில் இருக்கை எண்ணிக்கை 55ல் இருந்து 70 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அந்த பஸ்களுக்கு ‘பீக் அவர்ஸ்’ எனப்படும் அதிக பேர் பயணம் செல்லும் நேரங்களையும் அதிகாரிகள் ஒதுக்கி தருகின்றனர். தனியார் பஸ்களை பொறுத்தவரை ஐந்து நிமிடங்களுக்கு முன் பஸ் நிலையத்துக்குள் வந்து ஒதுக்கப்பட்ட நேரத்தில் செல்ல வேண்டும் என்பதுவிதி. ஆனால் அரை மணி நேரத்துக்கு முன் வந்து இருக்கைகள் நிரம்பும் வரை காத்திருந்து தனியார் பஸ்கள் தாமதமாக தான் செல்கின்றன. அவர்களுக்காக அதே வழித்தடத்துக்கான அரசு பஸ்களும் உரிய நேரத்தில் இயக்கப்படுவதில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தால் கூட்டம் இல்லை என்றாலும் தனியார் வாகனத் துக்கு பின் செல்லுங்கள் என்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Label