OUR CLIENTS
சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டக்கூடாது!
சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டக்கூடாது! Posted on 19-Jun-2018 சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டக்கூடாது!

சென்னை, ஜூன் 19-

ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிரான வழக்கை விசாரித்த ஐகோர்ட் தலைமை நீதிபதி, மெரீனா கடற்கரையில் நினைவிடம் கட்டக்கூடாது என தெரிவித்தார். 

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டது. 75 நாள் சிகிச்சைக்குக் பிறகு அவர் மரணமடைந்தார். அவரது உடல் கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதில் மிகப்பெரிய நினைவிடம் கட்ட அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நேற்று சென்னை ஹைகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.அப்போது, வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, கடற்கரை ஒழுங்குமுறை மண்டல பகுதியில் எந்த கட்டுமான பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என்பது தனது தனிப்பட்ட கருத்து என்றார். ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதில் தனிப்பட்ட முறையில் தமக்கு உடன்பாடு இல்லை என்று இந்திரா பானர்ஜி கருத்து கூறியுள்ளார். 

தனிப்பட்ட கருத்துக்கும் சட்டப்பூர்வமான கருத்துக்கும் வித்தியாசம் உள்ளது. தனிப்பட்ட கருத்து வேறாக இருந்தாலும், வழக்குகளில் சட்டத்திற்கு உட்பட்டு, வழக்கறிஞர்களின் வாதங்களைப் பொருத்தே இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. தமக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் சட்டப்படி தீர்ப்பு வழங்குவேன் என்றும் அவர் கூறினார். மேலும் வழக்கு விசாரணையை வரும் 25&ம் தேதிக்கு ஒத்திவைத்தார். ஹைகோர்ட் தலைமை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியின் இந்த கருத்து அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Label