OUR CLIENTS
காங்கிரஸ் தலைவர் ராகுலுடன் முதல்வர் குமாரசாமி சந்திப்பு!
காங்கிரஸ் தலைவர் ராகுலுடன் முதல்வர் குமாரசாமி சந்திப்பு! Posted on 19-Jun-2018 காங்கிரஸ் தலைவர் ராகுலுடன் முதல்வர் குமாரசாமி சந்திப்பு!

புதுடெல்லி, ஜுன் 19-

கர்நாடக முதல்வர் குமாரசாமி டெல்லியில் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ்&மதச்சாப்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. கூட்டணி ஒப்பந்தத்தின்படி, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி முதலமைச்சராகப் பதவியேற்றார். அதன்பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, இரு கட்சிகளையும் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 

இந்நிலையில், முதல்வர் குமாரசாமி நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது கர்நாடக மாநில விவகாரம் மற்றும் கூட்டணி விவகாரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தனிஷ் அலி, காங்கிரஸ் கட்சியின் வேணுகோபால் ஆகியோர் உடனிருந்தனர்.

Label