OUR CLIENTS
காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்!
காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்! Posted on 19-Jun-2018 காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்!

புதுடெல்லி, ஜுன் 19-

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கட்கரியுடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி, காவிரி மேலாண்மை ஆணையத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழகம், கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு பொதுவாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அளித்த உத்தரவின் அடிப்படையில் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் 4 மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள் எனவும் மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது. இதுதொடர்பாக, உறுப்பினர் பட்டியலை சமர்பிக்குமாறு மத்திய அரசு 4 மாநிலங்களுக்கும் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர் பட்டியல் மத்திய நீர்வளத்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

கர்நாடகா மாநிலம் மட்டும் உறுப்பினர் பட்டியலை சமர்ப்பிக்காமல் தாமத்தித்து வந்ததால் மத்திய அரசின் கண்டனத்துக்கு ஆளானது.. இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை கர்நாடக முதல்வர் குமாரசாமி நேற்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, காவிரி மேலாண்மை ஆணையத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகவும், அதனை சரிசெய்ய நீர்வளத்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தாங்கள் எதிரானவர்கள் அல்ல என்றும், அதனை நடைமுறைபடுத்துவதில் சிக்கல் உள்ளதாகவும் குறிப்பிட்ட குமாரசாமி, ஆணையத்தில் மாற்றங்கள் செய்தால் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்தில் இடம்பெறும் கர்நாடக உறுப்பினர்களின் பட்டியலை உரிய நேரத்தில் அறிவிப்போம் என்றும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Label