OUR CLIENTS
10 நாட்களுக்கு பிறகு இன்று கூடும் சட்டசபை பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திமுக திட்டம்
10 நாட்களுக்கு பிறகு இன்று கூடும் சட்டசபை பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திமுக திட்டம் Posted on 25-Jun-2018 10 நாட்களுக்கு பிறகு இன்று கூடும் சட்டசபை பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திமுக திட்டம்

சென்னை,  ஜூன் 25-

பத்து நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று திங்கள் கிழமை (25.6.2018) தமிழக சட்டசபை மீண்டும் கூடுகிறது. சேலம் -சென்னை 8வழிச் சாலை திட்டம், ஆளுநருக்கு கறுப்பு கொடி காட்டிய திமுகவினர் கைது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சட்டசபையில் எழுப்ப திமுக திட்டமிட்டுள்ளது.

2018 -2019-&ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மார்ச் 15&ம் தேதி தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதம் 10 நாட்கள் நடைபெற்ற நிலையில், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்தாமல் சட்டசபை ஓத்தி வைக்கப்பட்டது. பின்னர்,  மானிய கோரிக்கை நடத்துவது தொடர்பாக துறை வாரியாக முதல்வர் தலைமையில் அந்தந்த துறை அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் ஏப்ரல், மே மாதம் முழுவதும் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மானிய கோரிக்கை மீதான விவாத்தில் அறிவிக்கப்பட வேண்டிய அறிவிப்புகள் குறித்து விரிவாக முதல்வர் தலைமையில் ஆலோசிக்கப்பட்டது.

இன்று  (ஜூன், 25-ம் தேதி) மீண்டும் சட்டசபை காலை 10:00 மணிக்கு கூடுகிறது. இன்று மீண்டும் சட்டசபையில் செய்தி மற்றும் விளம்பரத் துறை; சுற்றுலா மற்றும் கலை பண்பாட்டுத் துறை மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக நடைபெற்ற கூட்டத்தில் 2019ஆம் ஆண்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை, 25 துணை மின் நிலையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை விதி எண் 110 கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்திருந்தார். இனி நடைபெறவுள்ள சட்டசபை கூட்டத்தில் விதி எண் 110 கீழ் புதிய அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிடுவார் எனத் தெரிகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, துப்பாக்கிச்சூடு, சேலம் -சென்னை 8 வழி பசுமைச் சாலை, மேட்டூர் அணை திறப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக திமுகவினர் அவ்வப்போது வெளிநடப்பு செய்வதும் திரும்பவும் சட்டசபைக்கு வருவதுமாக இருந்தனர். இதற்கிடையே காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணியும் குண்டுக்கட்டாக அவை காவலர்களால் வெளியேற்றப்பட்டார்  இன்று முதல், ஜூலை 9ம் தேதி வரை தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறவுள்ளது.  

Label