OUR CLIENTS
சித்தராமையாவுக்கு கேபினெட் ரேங்க் பதவி
சித்தராமையாவுக்கு கேபினெட் ரேங்க் பதவி Posted on 25-Jun-2018 சித்தராமையாவுக்கு கேபினெட் ரேங்க் பதவி

பெங்களூரு, ஜூன் 25-

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கேபினெட் ரேங்க் பதவி வழங்க மாநில கூட்டணி அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முந்தைய காங்கிரஸ் அரசில் முதல்வராக இருந்த சித்தராமையா, தற்போது அமைந்துள்ள மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசில் எம்எல்ஏவாக மட்டுமல்லாது காங்கிரஸ் சட்டப்பேரவைக்குழு தலைவராகவும் இருக்கிறார். இதுதவிர, மஜத-காங்கிரஸ் கூட்டணி ஒருங்கிணைப்புக்குழு தலைவராகவும் பணியாற்றி வருகிறார். கூட்டணி அரசுக்கு சித்தராமையாவின் முழுமையான ஒத்துழைப்பை பெறும் வகையில் ஒருங்கிணைப்புக்குழுவை அரசின் சார்பில் அமைக்க முதல்வார் குமாரசாமி திட்டமிட்டிருக்கிறார். அதன்மூலம், ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பதவியை கேபினெட் ரேங்க் பதவியாக அங்கீகரிக்கவும் முதல்வார் குமாரசாமி முடிவுசெய்திருக்கிறார். இதை துணைமுதல்வர் ஜி.பரமேஸ்வரும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

சித்தராமையா வகிக்கும் ஒருங்கிணைப்புக்குழு தலைவார் பதவியை கேபினெட் ரேங்க் பதவியாக அங்கீகரிக்க அரசு ஆலோசித்துவருகிறது என்று ஜி.பரமேஸ்வார் தெரிவித்தார்.கார்நாடக அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக அரசின் சார்பிலேயே ஒருங்கிணைப்புக்குழுவை அமைக்க முதல்வார் குமாரசாமி முடிவு செய்திருக்கிறார். இக்குழுவின் தலைவர் மற்றும் 4 உறுப்பினார்கள் பதவி அரசுப் பதவிகளாக கருதப்படும். அதன்பிறகு விதானசௌதாவில் சித்தராமையாவுக்கு தனி அறை ஒதுக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்கும் அதிகாரம் கர்நாடக அரசுக்கு உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை திங்கள்கிழமை மாலை முதல்வர் குமாரசாமி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Label