OUR CLIENTS
ஏடிஎம் மையத்தில் குப்பைக்கூளங்கள்!
ஏடிஎம் மையத்தில் குப்பைக்கூளங்கள்! Posted on 25-Jun-2018 ஏடிஎம் மையத்தில் குப்பைக்கூளங்கள்!

மதுராந்தகம், ஜூன் 25-

சோத்துப்பாக்கம் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையத்தின் உள்ளே குப்பைக் கூளங்கள் இருப்பதால் பணத்தை எடுக்க வரும் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த மையத்தை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வாடிக்கையாளர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 மதுராந்தகம் பாரத ஸ்டேட் வங்கியின் சார்பாக, சோத்துப்பாக்கம் வந்தவாசி சாலையில் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. சோத்துப்பாக்கம், மேல்மருவத்தூர், ராமாபுரம், கீழ்மருவத்தூர், பாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து கல்லூரி மாணவர்களும், வங்கி வாடிக்கையாளர்களும் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க இந்த மையத்தையே நாடுகின்றனர்.

 தினமும் 500க்கும் மேற்பட்டோர் இந்த மையத்துக்கு வந்து செல்கின்றனர். அவர்கள் வங்கி இருப்புப் பணத்தை அறியும்போதும், மையத்தில் பணம் இல்லாதபோதும் அச்சடிக்கப்பட்ட ரசீதுகள் வெளிவருகின்றன. அவை அனைத்தும் மையத்தில் சிதறி விழுந்து, குப்பைக் கூளமாக காட்சி அளிக்கிறது.

 இந்த ஏடிஎம் மையத்தை சுத்தப்படுத்த வங்கி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்காததால் அதிக அளவில் தூசுகள் சேர்ந்து, கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக இந்த ஏடிஎம் மையம் தற்போது மாறியுள்ளது. எனவே வங்கி நிர்வாகம் தலையிட்டு இந்த மையத்தில் உள்ள குப்பைக் கூளங்களைஅகற்ற ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அப்பகுதி வங்கி வாடிக்கையாளர்களும், சமூக ஆர்வலர்களும் வங்கி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Label