OUR CLIENTS
மேயர் போர்டை தனது காரில் வைத்தபடி வலம் வரும் அவலம்!
மேயர் போர்டை தனது காரில் வைத்தபடி வலம் வரும் அவலம்! Posted on 25-Jun-2018 மேயர் போர்டை தனது காரில் வைத்தபடி வலம் வரும் அவலம்!

திருநெல்வேலி, ஜூன் 25-

பதவி போய் பல மாதங்களாகியும் மேயராக பதவி வகித்த பெண் தன் காரில் மேயர் என எழுதப்பட்ட போர்டுடன் இன்னும் வலம் வருகிறார். 

தூத்துக்குடியில் அ.தி.மு.க., மேயராக இருந்தவர் அந்தோணி கிரேசி. தமிழகத்தில் உள்ளாட்சி பதவி 2016 அக்டோபர் மாதத்துடன் முடிந்தது. ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. சமீபத்தில் திருநெல்வேலியில் டி.டி.வி. தினகரன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க தூத்துக்குடியில் மேயராக இருந்த அந்தோணி கிரேசி காரில் வந்தார். அந்த கார் மற்றொரு காருடன் மோதியது. இதில் யாருக்கும் காயமில்லை. அந்தோணி கிரேசி வந்த காரில் மேயர் தூத்துக்குடி மாநகராட்சி என்ற வாசகம் அடங்கிய போர்டு இருந்தது. உள்ளாட்சியில் பதவி போய் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் மேயர் போர்டுடன் வலம் வந்த காரை பார்த்து பொதுமக்கள் முகம் சுளித்தனர்.

Label