OUR CLIENTS
பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜுலையில் தொடக்கம்!
பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜுலையில் தொடக்கம்! Posted on 26-Jun-2018 பாராளுமன்றத்தின் மழைக்கால  கூட்டத்தொடர் ஜுலையில் தொடக்கம்!

புதுடெல்லி, ஜுன் 26-

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறித்த தேதிகளை முடிவு செய்ய பாராளுமன்ற விவகாரத் துறை அதிகாரி களுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஆலோசனை நடத்தினார். கூட்டம் முடிந்ததும், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 18ஆம் தேதி துவங்கப்படும் என்று பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆனந்த் குமார் அறிவித்துள்ளார்.

வரும் ஜூலை 18 ஆம் தேதி துவங்கும் இந்த மழைக்கால கூட்டத்தொடர், ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். “நடைபெற இருக்கும் மழைக்கால கூட்டத்தொடரில் ஆதரவும் ஒத்துழைப்பும் நல்குமாறு எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொள்கிறோம். இந்த கூட்டத்தொடரில் பல முக்கியமான விஷயங்களை அரசு எடுத்துவைக்க உள்ளது. முத்தலாக் உள்ளிட்ட 6 முக்கியமான சட்டங்கள் இயற்றப்படவுள்ளன” என்று ஆனந்த் குமார் தெரிவித்தார்.

ஜம்மு& காஷ்மீர் கூட்டணி அரசு நீக்கம், கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் இணைந்து கூட்டணி அரசு நிறுவி இருப்பது, உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு கிடைத்த இடைத் தேரதல் தோல்விகள் நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதங்களை ஏற்படுத்தக் கூடும். பொருளாதார அரங்கில் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு, விவசாயிகள் பிரச்சினைகள், போராட்டங்கள், வங்கி மோசடிகள், வராக்கடன் சுமை கடுமையாக விவாதிக்கப்படலாம்.

Label