OUR CLIENTS
தோஷம் போக்கும் துர்க்கை ஸ்லோகம்
தோஷம் போக்கும் துர்க்கை ஸ்லோகம் Posted on 26-Jun-2018 தோஷம் போக்கும் துர்க்கை ஸ்லோகம்

கிரக தோஷத்தினால், எடுத்த செயலை செய்ய முடியாமல் தடங்கல் ஏற்படும் போது, இந்த சூலினி துர்க்கா மந்திரத்தை ஜபம் செய்து விட்டு தொடங்கினால் அதில் வெற்றி நிச்சயம்.

பிப்ரணா ஸூலபாணா ஸ்யரிஸதரகதா சாபபாஸாந் கராப்ஜை:
மேகஸ்யாமா கிரீடோல்லிகிதஜலதரா பீஷணா பூஷணாட்யா
ஸிம்ஹஸ்கந்தாதிரூடா சதஸ்ருபிரஸிகேடாந்விதாபி: பரீதா
கந்யாபிர்பிந்நதைத்யா பவது பவபய தவம்ஸிநீ ஸூலிநி வ:
பொதுப் பொருள்

சூலினி துர்க்காதேவியை வர்ணிக்கும் ஸ்லோகம் இது. பேரொளியோடு திகழும் திரிசூலத்தைக் கையில் தாங்கியவள்; எதிரிகளை அழிப்பதில் நிகரற்றவள். இரு புறங்களிலும் கத்தி, கேடயம் ஏந்திய தோழிகள் காவலிருக்க கம்பீரமாக கோலோச்சுபவள். இவளை நினைத்த மாத்திரத்திலேயே துஷ்ட கிரகங்கள் பயந்து ஓடுகின்றன. 
இந்த மந்திரத்தை ஜபம் செய்பவர்கள் எந்த செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி கிட்டும்.

Label