OUR CLIENTS
பொதுப்பணித்துறை இடத்தில் ஆக்கிரமிப்பு! அகற்ற கையாலாகாத அதிகாரிகள்!!
பொதுப்பணித்துறை இடத்தில் ஆக்கிரமிப்பு! அகற்ற கையாலாகாத அதிகாரிகள்!! Posted on 26-Jun-2018 பொதுப்பணித்துறை இடத்தில் ஆக்கிரமிப்பு! அகற்ற கையாலாகாத அதிகாரிகள்!!

திருவள்ளூர், ஜூன் 26-

திருவள்ளூர் மாவட்டம், பூண்டியில் இந்தியன் பாங்க் வீதியில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி வசித்துவருகின்றனர்-.

இந்த ஆக்கிரமிப்பு வீடுகளின் முன் பகுதியில் வீடு கட்டியுள்ள ஒருவர் அந்த வீட்டுக்கு பின்னால் வீடு கட்டியுள்ள வீடுகளுக்கு செல்ல இருந்த பொது வழி இடத்தை திடீரென்று ஆக்கிரமிப்பு செய்து கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி பொதுவழியாக பயன்படுத்தப்பட்டு வந்த வழியில் தடுப்புச் சுவர் கட்டி வழியை அடைத்துள்ளார். இதனால் அவ்வீட்டிற்கு பின்னால் உள்ள வீடுகளுக்குச் செல்ல வழியில்லாமல் தவிக்கின்றனர்.

முதல் வீட்டில் வசிக்கும் ஜெயா என்கின்ற பெண்மணி, பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான  பொதுவழியாக பயன்படுத்தப்பட்டு வந்த இடத்தை ஆக்கிரமித்து தடுப்புச் சுவர் கட்டி அராஜக வேலையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பொதுப்பணித்துறைக்கு புகார் அளித்தும் இதுவரையில் எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து அந்த பெண்மணி ஜெயா கூறுவது என்னவென்றால், யாராலும் என்னை ஒன்றும் செய்ய இயலாது என்றும், பொதுப்பணித்துறையே என் கையில்தான் உள்ளது என்றும் கொக்கரிக்கின்றார். நான் நினைப்பதுதான் பொதுப்பணித்துறையில் நடக்கும் என்று தான்தோன்றித்தனமாக கூறிவருகிறார். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் அந்த பெண்மணி ஜெயா கூறுவது போன்று பொதுப்பணித்துறை யின் செயல் உள்ளது. 

இவருக்கு பொதுப்பணித்துறையின் ஒப்பந்ததாரராக பணியாற்றும் விஜி என்பவர் பின்புலமாக செயல்படுகிறார். இவருக்கு பின்னால் பொதுப்பணித்துறையில் உள்ள அதிகாரிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆக்கிரமிப்பு செய்து பாதையை அடைத்து விட்டதால் அவரது வீட்டுக்கு பின்னால் உள்ள வீடுகளுக்குச் செல்ல முடியாமல் அந்த வீடுகளின் உரிமையாளர்கள் தவியாய் தவிக்கின்றனர். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் எதிரில் உள்ள பட்டா நிலத்தில் சென்று இந்த வீடுகளுக்குச் செல்வதாக கூறப்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் பொதுப்பணித்துறை அலட்சியம் செய்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒப்பந்ததாரர் விஜி கூறுவதையே வேதவாக்காக கொண்டு செயல்படுகின்றனர். இவர் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் என்று தன்னை கூறிக் கொண்டு மணல் கடத்தலில் ஈடுபடுகிறார். என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று வேறு கொக்கரிக்கிறார். இவருக்கு யார் இவ்வளவு தைரியம் கொடுத்தது என்று தெரியவில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விஜிதான் மாமூல் வசூல் செய்து தருகிறார் என்றும் கூறப்படுகிறது. இதனால் அவர் சொல்வதை தட்டாமல் அதிகாரிகள் செய்கின்றனர் என்ற பேச்சும் பொதுப்பணித்துறை அலுவலக வட்டாரத்தில் அடிபடுகிறது. 
பூண்டி இந்தியன் பாங்க் வீதியில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து தள்ளாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர் பொதுப்பணித்துறை அதிகாரிகள். இதற்காகவா பொதுப்பணித்துறை செயல்படுகிறது. ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்டு அரசு கணக்கில் வைக்க முன்வராமல் தயங்கி தயங்கி பணியாற்றுகின்றனர் இந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள். இவர்கள் கடமைக்காக செயல்படுகின்றனர் என்று மட்டும் தெள்ளத் தெளிவாக தெரியவருகிறது. பொதுப்பணித்துறையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் கையில் வைத்துள்ளார். முதல்வரின் துறையிலேயே இப்படி தில்லாலங்கடி அதிகாரிகள் வேலை செய்தால் நாடு எப்படி முன்னுக்கு வரும். அரசு நிலத்தை மீட்காமல் வேடிக்கை பார்ப்பதற்காகவா பொதுப்பணித்துறையில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்கள் புகார் மனு கொடுத்தும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் கண்டும் காணாமல் அலட்சியப் போக்குடன் செயல்படுகின்றனர். 

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் பொதுப்பணித்துறையின் மேற்பார்வை பொறியாளர் ஷிணி மணி, ஷிஞி கௌரிசங்கர், ணிணி விஜயகுமார், கிஞி சிவக்குமார் ஆகியோர் கூட்டாக கொள்ளையடிப்பதில் வல்லவர்கள் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களால் அடையாளம் காட்டப்படுகிறது. மாமூல் வந்தால் போதும், கையூட்டு வருகிறதா என்று பார்க்கிறார்களே தவிர பொதுப்பணித்துறை சொத்துக்களை காப்பாற்றுவதில் அவர்கள் எந்தவித முனைப்பும் காண்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இடத்தில் உள்ள கட்டடங்களை இடித்து  அப்புறப்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகளால் கையாலாகவில்லை என்று சொன்னால் அது ஏற்புடையதாக இல்லை என்றே சொல்லலாம். இது பொதுப்பணித்துறை இயக்குநர் கவனத்துக்கு கொண்டு செல்லவும், துறை செயலர் பார்வைக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 20 நாட்களுக்கு மேலாக புகார் மனு கொடுத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இடத்தை மீட்டு எடுக்க முடியாமல் பொதுப்பணிததுறையில் பணியாற்றும் அதிகாரிகள் உள்ளனர். நிலைமை இப்படி இருந்தால் இங்குள்ள அதிகாரிகள் எப்படி கல்லா கட்டுகின்றனர் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்த ஆக்கிரமிப்பு பிரச்னையில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டுள்ளவர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். 
ஒரு தனியார் ஒப்பந்ததாரருக்காக பொதுப் பணித்துறை இயங்குகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதுமட்டுமன்றி பொதுப்பணித்துறை அதிகாரிகளின் ஆதரவோடு கொசஸ்தலை ஆற்றில் மணல் கொள்ளை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதுபோன்று மணல் திருடி விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்த்து கொழிக்கும் விஜி போன்றோர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

உயர்அதிகாரிகள் வரை தொடர்புகொண்டு புகார் கூறியும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல உள்ளது. பொதுப்பணித்துறை இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கையாலாகாத அதிகாரிகளாக உள்ளனர் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Label