OUR CLIENTS
அதிக மின் கட்டணம் வந்துள்ளதால் எம்எல்ஏவுடன் முற்றுகை போராட்டம்!
அதிக மின் கட்டணம் வந்துள்ளதால் எம்எல்ஏவுடன் முற்றுகை போராட்டம்! Posted on 26-Jun-2018 அதிக மின் கட்டணம் வந்துள்ளதால் எம்எல்ஏவுடன் முற்றுகை போராட்டம்!

புதுச்சேரி, ஜூன் 26-

புதுச்சேரியில் உள்ள வீடுகளில் மின்துறை சார்பில் புதியதாக பொறுத்தப்பட்ட ஸ்மார்ட் மீட்டரால் பலமடங்கு மின்கட்டணம் வந்துள்ளதை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையில் மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி அரசு மின்துறை சார்பில் அனைத்து வீடுகளுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பில் இருந்து ஸ்மார்ட் மீட்டர்கள் பொறுத்தப்பட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட் மீட்டர் மூலம் கணக்கிடப்படும் மின் கட்டணம் வழக்கத்தைவிட பலமடங்கு அதிகமாக வந்ததாக கூறப்படுகிறது. ஆதலால் ஸ்மார்ட் மீட்டரை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், வம்பாகீரப்பாளையம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையில் தலைமை மின்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூடுதல் மின் உபயோகத்தை தவறுதலாக கணக்கிடும் புதிய ஸ்மார்ட் மீட்டரை திரும்பப்பெற வலியுறுத்தியும், பழையபடி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பழைய மின் மீட்டரை பொருத்த வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்கள் மின்துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் மின்சார வாரிய அலுவலகத்தில் மின்கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்கள் உயர்த்தப்பட்ட மின்கட்டண ரசீதுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Label