OUR CLIENTS
பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்!
பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்! Posted on 26-Jun-2018 பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்!

திருவண்ணாமலை, ஜூன் 26-

திருவண்ணாமலையில் பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய  5 மாவட்டங்கள் வழியாக பசுமை விரைவுச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு நிலம் கையகப்படுத்த  அளவீடு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விளை நிலங்கள், பசுமை நிறைந்த வனப்பகுதிகள், மலைகளை அழித்து போடும் இந்த சாலை திட்டத்துக்கு விவசாயிகள், பொதுமக்கள், திமுக, பாமக உள்ளிட்ட எதிர்கட்சிகள் மட்டுமன்றி பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

பசுமை சாலை திட்டத்தை எதிர்த்த சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திட்டத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் பசுமை விரைவு சாலை திட்டத்தை எதிர்த்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற  உறுப்பினர் எ.வ.வேலு தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் ஆர். சிவானந்தம் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் கு.பிச்சாண்டி, கிரி, சேகரன், அம்பேத்வளவன் உள்பட  300க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு பசுமை சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Label