OUR CLIENTS
நெருக்கடி நிலை பிரகடனத்தை பாடத்திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தல்!
நெருக்கடி நிலை பிரகடனத்தை பாடத்திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தல்! Posted on 27-Jun-2018 நெருக்கடி நிலை பிரகடனத்தை பாடத்திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தல்!

புதுடெல்லி, ஜுன் 27-

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் பிரகடனப்படுத்தப்பட்ட ‘மிசா’ என்னும் நெருக்கடி நிலை ஆட்சி காலத்தை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது கடந்த 25-6-1975 அன்று உள்நாட்டு பாதுகாப்பின் பராமரிப்பு எனப்படும் கொடிய ‘மிசா’ சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின்படி, வாஜ்பாய், அத்வானி, சந்திரசேகர் போன்ற நாட்டின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் மாநில கட்சிகளை சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். ஜாமினில் வெளியே வர முடியாத நிலையில் நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனர்.

பின்னர், 1997&ம் ஆண்டு மத்தியில் பொறுப்பேற்ற பா.ஜ.க. அரசு, 21 மாத காலம் நடைமுறையில் இருந்த இந்த சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. மிசா சட்டத்தில் கைதாகி சிறை சென்றவர்களுக்கு ஒவ்வொரு மாநில அரசும் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கி வருகின்றன.

மிசா சட்டம் அமல்படுத்தப்பட்ட நாளை ஜனநாயகத்தின் இருண்ட தினமாக ஆண்டுதோறும் பா.ஜ.க.வினர் கடைபிடிக்கின்றனர். இதையொட்டி, நேற்று முன்தினம் முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க.வினர் இந்த கருப்பு நாளை அனுசரித்து வருகின்றனர். இந்நிலையில், மிசா’ என்னும் நெருக்கடி நிலை ஆட்சி காலத்தை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
நெருக்கடி காலத்தை பற்றி இந்தி, கன்னடம், தெலுங்கு, குஜராத்தி மொழிகளில் பிரசார் பார்தி தலைவர் சூர்ய பிரகாஷ் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய வெங்கய்யா நாயுடு, நெருக்கடி நிலை காலம் என்பது நமது வரலாற்றின் ஒரு பகுதி. அதை நாம் மறைத்துவிட முடியாது என குறிப்பிட்டார்.

இந்திய ஜனநாயகத்தின் இருண்ட நாளான நெருக்கடி நிலையைப் பற்றி பள்ளி பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும். இதனால், நெருக்கடி நிலை என்றால் என்ன? அது எப்படி, ஏன் அமல்படுத்தப்பட்டது? என்பதை இந்த தலைமுறையினர் அறிந்துகொள்ள முடியும். இதைப்பற்றிய தெளிவை நாம் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Label