OUR CLIENTS
பலத்த பாதுகாப்புக்கு இடையே அமர்நாத் யாத்திரை இன்று தொடக்கம்
பலத்த பாதுகாப்புக்கு இடையே அமர்நாத் யாத்திரை இன்று தொடக்கம் Posted on 27-Jun-2018 பலத்த பாதுகாப்புக்கு இடையே அமர்நாத் யாத்திரை இன்று தொடக்கம்

ஸ்ரீநகர், ஜுன் 27-

அமர்நாத் குகைக் கோயிலில் தோன்றியுள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்வதற்காக அமர்நாத் யாத்திரையின் முதல் குழு இன்று காஷ்மீரில் இருந்து புறப்படுகிறது.

ஜம்மு&காஷ்மீர் மாநிலம், அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். 40 நாட்கள் இந்த யாத்திரை நீடிக்கும். கடந்த வருடம் ஜூலை மாதம் யாத்திரீகர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்  7 பேர் பலியாகினர், 12 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த, தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வருட அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு, பக்தர்களுக்கு அமைதியான மற்றும் பாதுகாப்பான யாத்திரையை உறுதி செய்ய, சர்வதேச எல்லை மற்றும் எல்லைக்  கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் உள்ள பாதுகாப்பு படையினர் தீவிர எச்சரிக்கையுடன் இருக்ககும்படி மத்திய அரசு ராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

மேலும், பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் ஆகியோர் அமர்நாத் யாத்திரைக்காக செய்யப்படுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர். 
இந்நிலையில், புனித யாத்திரையின் முதல் குழு காஷ்மீர் மாநிலம், பகவதி நகரில் உள்ள பாகல்காம் மற்றும் பல்தல் அடிவார முகாம்களில் இருந்து வாகனங்களில் இன்று புறப்பட்டு செல்கிறது. கடந்த ஆண்டு அமர்நாத் யாத்திரைக்காக 2.60 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த ஆண்டிற்கான யாத்திரை மேற்கொள்வதற்காக 1.96 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். சுமார் 40 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இதுவரை இல்லாத வகையில் இந்த வருடம் முதல் முறையாக ரேடியோ அதிர்வெண் பயன்படுத்தி யாத்திரிகர்கள் செல்லும் வாகனங்களை பாதுகாப்புப்படையினர் கண்காணிக்க உள்ளனர். இன்று தொடங்கும் அமர்நாத் யாத்திரை வரும் ஆகஸ்ட் மாதம், ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படும் தினமான 26&ம் தேதி நிறைவடைகிறது.

Label