OUR CLIENTS
விழுப்புரம் நகராட்சி 39-வது வார்டில் 3 மாதமாக குடிநீர் விநியோகம் நிறுத்தம்!
விழுப்புரம் நகராட்சி 39-வது வார்டில் 3 மாதமாக குடிநீர் விநியோகம் நிறுத்தம்! Posted on 27-Jun-2018 விழுப்புரம் நகராட்சி 39-வது வார்டில் 3 மாதமாக குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

விழுப்புரம், ஜூன் 27-

விழுப்புரம் நகரம் வேகமாக வளர்ந்து வரும் நகரமாகும். விழுப்புரத்துக்கு அருகில் புதுச்சேரி, கடலூர் நகரங்கள் உள்ளன. குறிப்பாக விழுப்புரம் நகராட்சியில் 41 வார்டுகள் மறுசீரமைப்பால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மகாராஜபுரத்தில் உள்ள மின்வாரிய குடியிருப்பில் 4 வீதிகள் உள்ளன.

இந்த வீதிகளில் அடிப்படை வசதிகளை திமுகவைச் சேர்ந்த முன்னாள் நகர மன்ற தலைவர் இரா.ஜனகராஜ் அனைத்தையும் நிறைவேற்றி தந்தார். அதற்கு பின்னர் வந்த அதிமுகவைச் சேர்ந்த நகர மன்ற தலைவர் பாஸ்கரன் எந்த பணிகளையும் செய்து தரவில்லை. இந்த மின்வாரிய குடியிருப்பு பகுதி திமுக வாக்காளர்கள் அதிகம் நிறைந்துள்ள பகுதி என்பதால் தொடர்ந்து புறக்கணிப்பு செய்து வந்தார். எந்த அடிப்படை வசதியையும் பாஸ்கர் செய்து தரவில்லை. 

இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக மின்வாரிய குடியிருப்பு பகுதியான 4&வது தெருவில் குடிநீர் வருவதே இல்லை. வழியில் குடிநீர் பைப் லைனில் சாக்கடை கழிவு நீர் கலந்து வந்தபடி உள்ளது. இதை கண்டுபிடிக்க நகராட்சி பொறியாளர் குழுவினர் பல இடங்களில் நகராட்சி குடிநீர் பைப் லைனை தோண்டி பார்த்தனர். ஆனால் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் டேங்கர் லாரிகளில் தெருத்தெருவாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் அந்த குடிநீர் டேங்கர் லாரி வருவதை வீடுகளுக்குள் உள்ள பொதுமக்களுக்கு சரிவர அறிவிப்பு செய்வது இல்லை. இதனால் பெரும்பாலும் வீடுகளில் உள்ள வயதான முதியோர் தண்ணீர் பிடிக்க முடியாமல் போகிறது. இந்த பைப் லைனில் எங்கு உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் கலக்கிறது என்பதை இதுநாள் வரை கண்டறியாமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியப் போக்கில் நடந்து கொள்கிறது. 

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் குடிநீர் கட்டணம் வசூல் செய்யும் நகராட்சி நிர்வாகம் குடிநீர் பைப் லைனில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து தருவதற்கு இப்படி காலம் தாழ்த்துவது முறையானதாக இல்லை. இந்த பிரச்னையை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடித்து தர வேண்டும் என்று மின்வாரிய குடியிருப்பில் வசிப்போர் எதிர்பார்க்கின்றனர். நகர மன்ற உறுப்பினர், நகர மன்ற தலைவர் போன்றவர்கள் இல்லாததால் அதிகாரிகள் அலட்சியப் போக்கில் நடந்து கொள்கின்றனர். நீரின்றி அமையாது உலகு என்று ஓளவையார் பாடிச் சென்றுள்ளார். ஆனால் நன்கு மழை பெய்தும், தென்பெண்ணையாற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடியும் நகராட்சி நிர்வாகம் குடிநீரை விநியோகம் செய்ய இயலாமல் ஏன் தடுமாறுகிறது என்பது புரியாத புதிராக உள்ளது.

போர்க்கால அடிப்படையில் இந்த பகுதியில் கடந்த 3 மாத காலமாக இந்த தெருக்களில் தலைவரித்தாடும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பதே இப்பகுதி வாழ் மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label