OUR CLIENTS
சேலம்- சென்னை பசுமை வழிச்சாலை- அரசாணையை எரித்து போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு!
சேலம்- சென்னை பசுமை வழிச்சாலை- அரசாணையை எரித்து போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு! Posted on 27-Jun-2018 சேலம்- சென்னை பசுமை வழிச்சாலை- அரசாணையை எரித்து போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு!

காஞ்சிபுரம், ஜூன் 27-

சேலம் -சென்னை 8 வழி பசுமை சாலை சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்கள் வழியாக 277 கி.மீ. தொலைவு அமைப்பதற்கு மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டம் மூலம் விவசாய நிலங்கள், கிணறுகள், வீடுகள் உள்ளிட்ட பகுதிகள் கையகப் படுத்தப்படவுள்ளதால் விவசாயிகள், பொது மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் ஆயிரம் ஹெக்டேர் அரசு நிலம் வழியாகவும், 4 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் வழியாகவும் ,  சேர்வராயன், கல்வராயன் மலை உள்பட 8 மலைகள் வழியாக,120 ஹெக்டேர் வனப்பகுதி வழியாகவும் இந்த பசுமை வழி சாலை அமைகிறது. 23 பெரிய பாலங்களும், 156 சிறு பாலங்களும், 9 மேம்பாலங்களும், பாலங்களுக்கு கீழ் 22 வாகன கீழ் வழிச்சாலையும், 2 பாலங்களுக்கு கீழ் இன்னொரு வழிச்சாலையும் அமைக்கப்படுகிறது. 

வனப் பகுதியில் 3 சுரங்கப் பாதைகளும், 8 சுங்க சாவடிகளும், லாரிகள் மற்றும் பஸ்கள் நிறுத்தும் இடம் 10 இடங்களில் அமைக்கப்பட உள்ளது. இதனால் பல்வேறு முன்னணி அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகள், விவசாயிகள், கிராம மக்கள் சுற்றுசூழல் ஆர்வலர்கள்,  பொதுமக்கள் உள்ளிட்டோர்  கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை  நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 
உத்திரமேரூர் வட்டம் , செங்கல்பட்டு வட்டம்,  ஸ்ரீபெரும்புதூர் வட்டம் ,படப்பை உள்ளிட்ட வட்டங்களை சேர்ந்த பல கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள், 100க்கும் மேற்பட்ட வீடுகள், 100க்கும் மேற்பட்ட  கிணறுகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை,மாமரங்கள்,பனை மரங்கள், உள்ளிட்டவைகளை கையகப்படுத்தி  சுமார்  59.1 கிமீ வரை பசுமை வழி சாலை அமைக்கப்படவுள்ளது.

இதற்காக 318 எக்டர் விவசாய நிலமும், 77 எக்டர் அரசு நிலமும், 9 எக்டர் காடு,வனபகுதிகள் என சுமார் 404 எக்டர் கையகப்படுத்தப்படவுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட விவசாய சங்கங்கள்,பாதிக்கப்படும்  விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இத்திட்டத்தினை கைவிடக்கோரி மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இந்நிலையில்  இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம்   மணல்மேடு ,கன்னிகுளம், புத்தளி, ஒழுகரை, வெங்கூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில்  விவசாயிகள்  தங்களது வீடுகள் ,விவசாய நிலங்கள், மரங்கள் உள்ளிட்டவைகளில் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி மத்திய மாநில அரசுக்கு பதிவு செய்தனர்.மேலும் சேலம்& சென்னை பசுமை சாலையினை கைவிடக்கோரி வலியுறுத்தியும், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வருகின்ற ஜூலை மாதம் 6ம் தேதியன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேலம்& சென்னை  8 வழி பசுமை சாலையின் அரசாணையினை தீயிட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட  விவசாயிகள் சங்கம் மற்றும் பாதிக்கப்படும் விவசாயிகள், பொது மக்கள் முடிவு செய்துள்ளனர்.

Label