OUR CLIENTS
போக்குவரத்து காவலர் மீது தாக்குதல்!
போக்குவரத்து காவலர் மீது தாக்குதல்! Posted on 27-Jun-2018 போக்குவரத்து காவலர் மீது தாக்குதல்!

சென்னை ஜூன் 27-

சென்னை திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலருக்கு உருட்டு கட்டையால் அடி விழுந்தது.காவலரை தாக்கி விட்டு மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர்.

திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில், திருவொற்றியூர் பலகைதொட்டி குப்பம் பகுதியில் போக்குவரத்து காவலர் ஏழுமலை (தலைமை காவலர்) கனரக வாகனங்களை வரிசையில் நிறுத்தி ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு நின்றிருந்த கனரக வாகன ஒட்டுநரிடம் மர்மநபர்கள் கத்தியைக் காட்டி பணம் பறிக்க முயன்றுள்ளனர். அதனைத் தட்டிக்கேட்ட ஏழுமலையை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து திருவொற்றியூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏழுமலை தலையில் தையல் போடப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எண்ணூர் விரைவுச்சாலை பகுதியில் இதேபோல மொபைல் போன் பறிக்கும் சம்பவமும் நேற்றுமுன்தினம் நடந்துள்ளது.  காஞ்சிபுரம் பகுதியில் ஒரு காவலர் கல்லால் அடித்து கொல்லப்பட்டுள்ளார். இதனால் காவலர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது  குறிப்பிடத்தக்கது.

Label