OUR CLIENTS
முதல்வர் பழனிச்சாமி ஆட்சி அடிமை ஆட்சி! ஆளுநரின் ஆட்சி எஜமானர் ஆட்சி!!
முதல்வர் பழனிச்சாமி ஆட்சி அடிமை ஆட்சி! ஆளுநரின் ஆட்சி எஜமானர் ஆட்சி!! Posted on 28-Jun-2018 முதல்வர் பழனிச்சாமி ஆட்சி அடிமை ஆட்சி! ஆளுநரின் ஆட்சி எஜமானர் ஆட்சி!!

சென்னை, ஜுன் 28-

தமிழகத்தில் ஆளுநரின் தலைமையில் எஜமானர் ஆட்சி நடப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் நேற்று மாவட்டங்களில் ஆளுநர் ஆய்வு செய்வது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்கவில்லை எனக்கூறி, திமுக எம்எல்ஏக்கள் அக்கட்சியின் செயல் தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

அதன்பின்னர் சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஆளுநர் மாளிகையில் இருந்து செவ்வாய்க்கிழமை வந்த அறிக்கையில் ஆளுநர் மாளிகை நேரடியாக தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் தொடர்பு வைத்துக் கொண்டு கூட்டங்களை ஏற்பாடு செய்து அதன் அடிப்படையில் ஆளுநர் ஆய்வுகள் நடைபெறுவதாக தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது. இந்த செய்தி தமிழக அரசுக்கு தெரியுமா? முதல்வருக்கு தெரிந்துதான் நடக்கிறதா? அப்படியிருந்தால் ஏற்கெனவே முதல்வர் விளக்கம் தந்திருக்க வேண்டும். அரசின் சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

2 நாட்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த அறிக்கையில் ஆய்வு நடத்துவதற்காக ஆளுநர் மாவட்டங்களுக்கு செல்லவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், செவ்வாய்க்கிழமை வெளியி டப்பட்ட அறிக்கையில் தலைமை செயலாளருக்கு தகவல் தெரிவித்துவிட்டு அவரின் ஒப்புதலுடன் தான் ஆய்வு நடத்தியிருக்கிறோம் என்று செய்தி வருகிறது.

இதைப்பற்றி சட்டசபையில் பேச வேண்டும் என்று கேட்டோம். அதற்கு விளக்கம் சொல்ல வேண்டும் என நான் எழுந்து கேட்டேன். ஆனால், அதற்கு வாய் மூடி மவுனியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருந்தார். அதைக் கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

ஆளுநருக்கு கட்டுப்பட்டு, மத்திய அரசுக்கு அடிமையாக மாநில சுயாட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், மாநில உரிமைகளை பறிக்கக்கூடிய நிலையில் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை இரட்டை ஆட்சி நடக்கிறது. ஒன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி. மற்றொன்று ஆளுநர் ஆட்சி. முதல்வர் தலைமையிலான ஆட்சி அடிமை ஆட்சி போல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆளுநர்ஆட்சி எஜமானர் ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது. இதுதான் உண்மை என ஸ்டாலின் தெரிவித்தார்.

Label