OUR CLIENTS
ஜூலை முதல் திமுகவில் 3 சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமனம் செய்ய முடிவு! செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி ஆக்ஷன்
ஜூலை முதல் திமுகவில் 3 சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமனம் செய்ய முடிவு! செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி ஆக்ஷன் Posted on 28-Jun-2018 ஜூலை முதல் திமுகவில் 3 சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமனம் செய்ய முடிவு! செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி ஆக்ஷன்

வேலூர், ஜூன் 28-

திமுகவில் வரும் ஜூலை மாதம் முதல் 3 சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமனம் செய்ய செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இந்த அதிரடி ஆக்ஷனால் திமுக முன்னணி தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆட்டம் கண்டுள்ளனர்.

கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்கள் அடங்கிய கொங்கு மண்டலம்தான் திமுகவுக்கு எப்போதும் தீராத தலைவலியாக இருந்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் உள்குத்து, காலை வாருதல் போன்றவைகள் சகஜமாக நடந்து வருகிறது. இதனால் எந்த பகுதியில் திமுக பலவீனமாக இருக்கிறதோ அங்கிருந்து தனது அதிரடியை ஆரம்பித்துள்ளார் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். 

Êசமீபத்தில் கோயம்புத்தூர் பகுதியில் இருந்து மாற்றம் என்னும் மறுமலர்ச்சியை ஆரம்பித்தார் ஸ்டாலின். அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட வாரியாக கள ஆய்வு கூட்டம் நடந்தபோது கட்சிக்கு உழைக்காதவர்களை தூக்கி எறியத் தயங்கமாட்டேன் என்று எச்சரித்திருந்தார் ஸ்டாலின். இது அனைவருக்கும் நன்கு தெரியும். அந்த எச்சரிக்கையின் முதல் நடவடிக்கையாக கோயம்புத்தூர் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த தமிழ்மணிக்கு கல்தா கொடுத்து விட்டு பொள்ளாச்சி நகர செயலாளராக இருந்த தென்றல் செல்வராஜை மாவட்ட பொறுப்பாளராக நியமித்தார் ஸ்டாலின். செல்வராஜ் நியமனத்தை பாரபட்சமின்றி வரவேற்றனர் உடன்பிறப்புகள். இதற்கு காரணம் கவுண்டர் சமுதாயம் செல்வாக்கோடு உள்ள மேற்கு மண்டலத்தில் எந்த கவுண்டர் சமுதாயத்திலேயே பின் தங்கிய முடவாண்டி பிரிவைச் சேர்ந்தவர் தென்றல் செல்வராஜ். மேலும் அவர் தீவிர களப்பணியாளர்.

கட்சி அறிவிக்கும் போராட்டங்களுக்கு ஆட்களை திரட்டி வருவதில் அவ்வளவாக ஆர்வம் காட்டமாட்டாராம் தமிழ்மணி. ஆனால் செல்வராஜோ பெருங்கூட்டத்தை திரட்டி திக்குமுக்காடச் செய்துவிடுவாராம். இதுதான் கட்சிக்காரர்களிடம் இருந்து தமிழ்மணியை தனிமைப்படுத்தியிருக்கிறது. இதற்கடுத்த அதிரடி கல்தா மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளரான மீனா லோகுவுக்கு. இதேபோன்று பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் என்று பலரது பதவிகளை பறித்து அதிரடி ஆக்ஷனில் களம் இறங்கியுள்ளார் மு.க.ஸ்டாலின். 

ஒருபுறம் வரவேற்பும், மகிழ்ச்சியும் இருந்தாலும் ஒருபுறம் சலசலப்பும் இருக்கத்தான் செய்கிறது. இப்படி அதிரடி ஆக்ஷனில் இறங்கியுள்ள ஸ்டாலின் புதிதாக மண்டல வாரியாக அமைப்பு செயலாளர்களை நியமிக்கலாம் என்ற பேச்சு அறிவாலய வட்டாரத்தில் பலமாக அடிபடுகிறது. இதேபோன்று தமிழகத்தில் மாவட்ட செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இருந்து வருகின்றனர். இதிலும் பலருக்கு வாய்ப்பு வழங்க முடிவு செய்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 3 சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரை நியமனம் செய்ய முடிவு செய்துள்ளார். அத்துடன் ஜூலை மாதம் முதல் இந்த புதிய மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்யவும் தயாராகி அதற்குண்டான பட்டியலையும் தயார் நிலையில் வைத்துள்ளார் ஸ்டாலின். இதனால் திமுகவில் உள்ள பெரும்புள்ளிகள் கலக்கமடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள திமுக உடன்பிறப்புகள் புது தெம்புடன் கழகப் பணியாற்றிட வசதியாக இருக்கும் என்ற தொலைநோக்கு சிந்தனையோடு ஸ்டாலின் இந்த அதிரடி முடிவை மேற்கொண்டுள்ளார் என்றும் திமுக வட்டாரத்தில் பரபரப்பாகச் சொல்லப்படுகிறது.

Label