OUR CLIENTS
காட்பாடியில் குறு மற்றும் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!
காட்பாடியில் குறு மற்றும் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி! Posted on 28-Jun-2018 காட்பாடியில் குறு மற்றும் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!

வேலூர், ஜூன் 28-

ஐக்கிய நாடுகள் பொது சபையின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தொடங்கி வைத்தார்.

ஐக்கிய நாடுகள் பொது சபை ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதம் 27ம் நாள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாளாக கொண்டாடப்படுகிறது. அதனடிப்படையில் தமிழக அரசு மாநில மற்றும் மாவட்ட அளவில் அரசு துறைகள், முகமைகள், தொழிற்சங்கங்கள் மற்றும் திட்ட பயனாளிகளை கொண்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் ஐக்கிய நாடுகள் பொது சபையின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் விழிப்புணர்வு நாள் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தொடங்கி வைத்து பேசியதாவது:& தொழில் வளர்ச்சி என்பது நாட்டிற்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். வேலூர் மாவட்டம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலில் 100 சதவிகித இலக்கை எட்டியுள்ளது. பெரிய பெரிய தொழிற்சாலைகள் அனைத்தும் சிறு, குறு நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பெற்றுதான் தங்களுடைய பொருட்களை உற்பத்தி செய்து வளர்ந்து வருகிறது. இதுதான் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கியத்துவம் ஆகும்.

உலக சந்தையோடு போட்டி போடும் அளவிற்கு இந்தியாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தி பொருட்களை தரம் உயா;த்துவதற்கான மத்திய அரசு புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தொழில் முனைவோர்கள் தங்களுடைய உற்பத்திப் பொருட்களை நல்ல தரத்தோடு உற்பத்தி செய்து சந்தைக்கு அனுப்புவது உறுதி செய்யப்பட்டு சந்தைக்கு அனுப்பப்படும் பொருட்களை ஏதேனும் குறை என்று கூறி, சந்தையிலிருந்து திரும்ப அனுப்ப முடியாத அளவிற்கு அதன் தரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாத்து கரியமிலவாயு வெளிப்பாட்டை குறைப்பது மட்டுமல்லாமல் திறமையுள்ள தொழிலாளர்களை உருவாக்குவது உள்ளிட்ட முக்கிய நோக்கமாக ஜுரோ டிபெக்ட் மற்றும் ஜுரோ எஃபெக்ட் சான்றிதழ் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, மத்திய அரசு சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களை ஆய்வு மற்றும் மதிப்பீடு செய்து அந்நிறுவனங்களுக்கு முத்திரையை மத்திய அரசு வழங்குகிறது. மத்திய அரசின் சான்றிதழை பெறுவதற்கு ஆகும் செலவை மத்திய அரசு மானியமாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது. தொழில் நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்கள் மின்னாற்றல் தணிக்கை மற்றும் மின்னாற்றலை சேமிக்கும் புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தொழில் நிறுவனங்கள் மின்னாற்றல் தணிக்கைக்கு ஆகும் செலவில் 50 சதவிகிதம் அல்லது அதிகபட்சம் ரூ.75 ஆயிரம் வரை தமிழக அரசு மான்யமாக வழங்கும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்னாற்றல் தணிக்கை செய்து அதன் பரிந்துரைகளை செயல்படுத்தி மின் நுகர்வை குறைத்து மின்னாற்றல் செலவு மற்றும் மின் கட்டணத்தை குறைப்பதாகும்.

தொழில் நிறுவனங்கள் மின்னாற்றலை சேமிப்பதற்கான தொழில் நுட்பங்களை பெறுவதற்கும் மின்னாற்றலை சேமிப்ப தற்கான உபகரணங்கள் அமைப்பதற்கான 25சதவிகிதம் மான்யமும் அதற்கான செலவினங்களுக்காக அதிகபட்சமாக ரூ.2,50,000& நிதியுதவி வழங்கப்படும். 

மேலும் புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன வளர்ச்சித் திட்டம், பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மான்யத்துடன் கூடிய தொழிற் கடன், வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம், இயந்திரங்களுக்கான முதலீட்டு மான்யம், மின்மான்யம், மின்னாக்கி மான்யம் மற்றும் பின்முனை வட்டி மான்யம் ஆகிய திட்டங்களை மாவட்ட தொழில் மையம் மூலமாக சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்த ஆண்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்க ரூ.1000 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.200 கோடி தாழ்த்தப்பட்ட மற்றும பழங்குடியினருக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டங்களை சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் முனைவோர்கள் முறையாக பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் சிறந்த தொழில் முனைவோர் 8 நபர்களுக்கு நினைவுப் பரிசுகளை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் சுந்தர்ராஜ், மாவட்ட தொழில் மைய மேலாளர் மணிவண்ணன், ராணிப்பேட்டை சிட்கோ சங்கத் தலைவர்; அமிர்தகணேசன், வேலூர் மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் சங்கத் தலைவர் மரு.சுவாமிநாதன், உதவி இயக்குநர் (தொழில் மையம்) அசோகன் மற்றும் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பத்திரிகை செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Label