OUR CLIENTS
மேல்-சபை துணைத்தலைவர் பதவி திரிணாமுல் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சி!
மேல்-சபை துணைத்தலைவர் பதவி திரிணாமுல் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சி! Posted on 29-Jun-2018 மேல்-சபை துணைத்தலைவர் பதவி திரிணாமுல் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சி!

புதுடெல்லி, ஜுன் 29-

பாராளுமன்ற மேல்-சபை துணைத் தலைவர் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுப்போம் என்று காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பாராளுமன்ற மேல்-சபை துணைத் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.ஜே.குரியன் இருந்து வருகிறார். கேரளாவைச் சேர்ந்த அவர் இந்த பதவியில் கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி முதல் இருந்து வருகிறார். பி.ஜே.குரியனின் பதவி காலம் அடுத்த மாதம் 1-ந் தேதியுடன் முடிகிறது. இதைத் தொடர்ந்து பாராளுமன்ற மேல்-சபைக்கு புதிய துணைத் தலைவரை தேர்வு செய்ய வேண்டியதுள்ளது.

பாராளுமன்ற மேல்-சபையில் மொத்தம் 250 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் 238 பேர் மாநில எம்.எல்.ஏ.க்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள். 12 எம்.பி.க்கள் நியமனம் செய்யப் பட்டவர் களாவார்கள். இந்த எம்.பி.க்கள்தான் ஓட்டு போட்டு மேல்-சபை துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். மேல்&சபை துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க பா.ஜ.க. தலைமையிலான கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மேல்&சபை துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற 122 எம்.பி.க்களின் ஆதரவு தேவையாகும்.
மேல்&சபையில் பா.ஜ.க.வுக்கு 67 எம்.பி.க்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 51 எம்.பி.க்கள் உள்ளனர். இதனால் கூட்டணி கட்சிகளின் தயவு இல்லாமல் எந்த வேட்பாளரும் வெற்றி பெற இயலாது என்ற சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில் சில மாநில கட்சிகளை சரிகட்டி துணைத் தலைவர் பதவியை கைப்பற்ற பா.ஜ.க. மூத்த தலைவர்கள் காய்களை நகர்த்தி வருகிறார்கள். இதை அறிந்த காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க.வை தடுத்து நிறுத்த மாநில கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுக்க திட்டமிட்டுள்ளது.

அதன்படி மேல்-சபை துணைத் தலைவர் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுப்போம் என்று காங்கிரஸ் கட்சி அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. ஒடிசாவில் ஆளும் கட்சியாக உள்ள பிஜு ஜனதா தளம் கட்சி ஆதரவை பெற்றுவிட்டால் மேல்-சபை துணைத் தலைவர் பதவியை எளிதாக கைப்பற்றி விடலாம் என்று காங்கிரஸ் கட்சி கருதுகிறது. அதற்கு ஏற்ப காங்கிரஸ் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

இதையடுத்து மேல்-சபை துணைத் தலைவர் பதவியை திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கட்சி சார்பில் மூத்த தலைவர் சுகேந்துசேகர்ராய் வேட் பாளராக நிறுத்தப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையே மேல்&சபை துணைத் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.

Label