OUR CLIENTS
ராணுவ வீரர்களின் தியாகத்தை வைத்து அரசியல் செய்யும் பா.ஜ.க.
ராணுவ வீரர்களின் தியாகத்தை வைத்து அரசியல் செய்யும் பா.ஜ.க. Posted on 29-Jun-2018 ராணுவ வீரர்களின் தியாகத்தை வைத்து அரசியல் செய்யும் பா.ஜ.க.

புதுடெல்லி, ஜுன் 29-

சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற ராணுவ நடவடிக்கைகளை, அரசியல் ஆதாயத்திற்காக பாரதிய ஜனதா கட்சி பயன்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

காஷ்மீரில் ஊடுருவிய பயங்கரவாதிகள் உரி பகுதியில் நடத்திய திடீர் தாக்குதலில் 17 வீரர்கள் உயிரிழந்தனர். இந்தியா இதற்கு பதிலடி கொடுக்கும் என பிரதமர் மோடி எச்சரித்ததை தொடர்ந்து, கடந்த 2016&ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் இந்திய வீரர்கள் புகுந்து நடத்திய அதிரடி தாக்குதலில் அங்கிருந்த 7 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. 

இந்நிலையில், டெல்லியில் செய்தி யாளர்களிடம் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜீவாலா பேசுகையில் :- பா.ஜ.க அரசு வாக்குகளுக்காக ராணுவ வீரர்களின் ரத்தத்தையையும் தியாகத்தையும் வைத்து அரசியல் பிரச்சாரம் செய்யும் போக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடவடிக் கைகளை உத்திரப்பிரதேச சட்டசபை தேர்தல் அரசியலுக்கு கடந்த 2017&ம் ஆண்டு பா.ஜ.க பயன்படுத்தியது. அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜ.க தற்போது சர்ஜிக்கல் ஸ்டிரைக் வீடியோக்களை மீண்டும் வெளியிட்டுள்ளது.

ஒருபக்கம், ராணுவத்தின் வெற்றியை மட்டும் தங்களது வெற்றியாக பாவித்துக்கொள்ளும் அரசு , மறுபக்கம் சரிவர ராணுவத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாததால் இந்த அரசு பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இயலாமை நிலையில் உள்ளது. இதன் காரணமாக இந்த ஆட்சியில் அதிகப்படியான ராணுவ வீரர்கள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Label