OUR CLIENTS
பொன்னேரியில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா?
பொன்னேரியில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா? Posted on 29-Jun-2018 பொன்னேரியில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா?

பூவிருந்தவல்லி, ஜூன் 29-

பொன்னேரி பகுதியில், பள்ளிக்குச் செல்லும் நேரத்திலும், பள்ளி முடிந்து வீடு திரும்பும் நேரத்திலும் பேருந்தில் இடம் கிடைக்காமல் மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருவதால், கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், உலகநாத நாராயணசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. 
இங்குள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2500க்கும் மேற்பட்ட மாணவிகளும், அதே போன்று பொன்னேரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்களும், உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரியில் 3500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் படித்து வருகின்றனர். 

இதில், பெரும்பாலான மாணவர்கள் பொன்னேரியைச் சுற்றிலும் உள்ள மெதூர், பழவேற்காடு, உப்பளம், பரிக்கப்பட்டு, ஆலாடு, கொளத்தூர், ரெட்டிப்பாளையம், தத்தைமஞ்சி, சின்னமனோபுரம், பெரிய மனோபுரம், ஆண்டார்குப்பம், வைரங்குப்பம், சைனாவரம், மாதவரம், கூடுவாஞ்சேரி, அரசூர் தேர்வாய், மாதர்பாக்கம், பனப்பாக்கம், இலுப்பாக்கம், ஆரம்பாக்கம், கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், மேல்பாக்கம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வருபவர்கள் ஆவர். 

பள்ளி விடும் நேரத்தில் பேருந்துகளில் கூட்ட நெரிசல்...: பொன்னேரியைச் சுற்றிலும் உள்ள கிராமப் பகுதிகளுக்கு குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்படுவதால் மாணவர்கள் கல்லூரி, பள்ளி செல்லும் நேரத்திலும், பின்னர் அவர்கள் வீடு திரும்பும் நேரத்திலும் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிக அளவில் இருக்கும். இதனால் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடியே மாணவர்கள் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால், விபத்துகளும் ஏற்படுகின்றன. 

எனவே, பொன்னேரியைச் சுற்றிலும் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் நலன் கருதி, பள்ளிக்குச் செல்லும் நேரத்திலும், பள்ளி முடிந்து வீடு திரும்பும் நேரத்திலும் கூடுதல் பேருந்துகளை இயக்க சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Label