OUR CLIENTS
அந்தியோதயா ரயில் பயண நேரத்தை குறைக்க வேண்டும்!
அந்தியோதயா ரயில் பயண நேரத்தை குறைக்க வேண்டும்! Posted on 02-Jul-2018 அந்தியோதயா ரயில் பயண நேரத்தை குறைக்க வேண்டும்!

திருநெல்வேலி, ஜூலை 2-

நெல்லை, தாம்பரம் இடையே இயக்கப்படும் அந்தியோதயா ரயில் பயண நேரத்தை குறைக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

இதுதொடர்பாக மும்பை தமிழின ரயில் பயணிகள் நலச்சங்க பொதுச்செயலாளர் அப்பாதுரை, ரயில்வே அமைச்சர் பியூர் கோயல் மற்றும் தென்னக ரயில்வே பொது மேலாளர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: ரயில்வே வரலாற்றில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு அடுத்தபடியாக நெல்லையில் இருந்து சென்னைக்கு 2வது தினசரி ரயிலாக அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. நெல்லை சென்னை தாம்பரம் அந்தியோதயா ரயிலை பொதுமக்கள் வரவேற்று உள்ளனர். இந்த ரயில் பயண நேரத்தை 16 மணி நேரத்தில் இருந்து குறைக்க வேண்டும்.

நெல்லையில் இருந்து செல்லும் போது விழுப்புரம், செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் இந்த ரயிலை நிறுத்தி வைத்து மற்ற ரயில்களுக்கு வழி விடுவதை தவிர்த்தால் தாம்பரத்துக்கு காலை 9.45 மணிக்கு செல்வதற்கு பதிலாக முன்னதாக காலை 7.30 மணிக்கே சென்றடைய முடியும்.

அதே போல் இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து இரவு 12 மணிக்கு இயக்குவதற்கு பதிலாக முன்னதாக இரவு 10 மணிக்கு புறப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ரயிலில் தற்போது உள்ள 16 பெட்டிகளின் எண்ணிக்கையை 24 பெட்டிகளாக உயர்த்த வேண்டும். கூடுதலாக இணைக்கப்படும் 8 பெட்டிகளை படுக்கை வசதி கொண்ட முன்பதிவு பெட்டிகளாக இணைத்தால் முதியோர் பயன் அடைவார்கள். மேலும் நாகர்கோவில் சென்னை இடையே மேலும் ஒரு அந்தியோதயா ரயிலை நெல்லை, மதுரை, திருச்சி, விருத்தாசலம் வழியாக இயக்க வேண்டும். இரட்டை வழி பாதையில் மின்சார ரயிலாக இயக்கினால் 13 நேரத்தில் இந்த பயணம் எளிதாக இருக்கும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Label