OUR CLIENTS
அலுவலகத்தில் எலிகள் தொல்லை கோப்புகள் சேதமாவது தொடருது!
அலுவலகத்தில் எலிகள் தொல்லை கோப்புகள் சேதமாவது தொடருது! Posted on 02-Jul-2018 அலுவலகத்தில் எலிகள் தொல்லை கோப்புகள் சேதமாவது தொடருது!

புதுச்சேரி, ஜூலை 2-

புதுச்«சி சாரத்தில் உள்ள புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையில், ஊழியர்கள் கோப்புகளை வைக்க போதுமான அலமாரிகள் இல்லை. வேறுவழியின்றி கோப்புகளை மேஜை மீதும், தரையிலும் பெண் ஊழியர்கள் மலைபோல் குவித்து வைத்துள்ளனர்.

கோப்புகளை வைக்க அலமாரிகள் வேண்டுமென பல ஆண்டுகளாக கேட்டும் கிடைக்கவில்லை. கடந்த சில மாதங்களாக இந்த அலுவலகத்தில் எலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வுதியத்துக்காக விண்ணப்பித்துள்ள பொதுமக்களின் கோப்புகளை எலிகள் குதறி விட்டால், அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் என்ன பதில் சொல்வது என பெண் ஊழியர்கள் புலம்பி வருகின்றனர். காலையில் பணிக்கு வரும்போதே கோப்புகள் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டு உள்ளே நுழைகின்றனர். ஒவ்வாரு நாளும் இப்படித் தான் நகருகிறது.

எலிகளிடமிருந்து கோப்புகளை பாதுகாக்க அலமாரிகள் அளிக்க அதிகாரிகள் உத்தரவிடவேண்டும் என பெண் ஊழியர்கள் எதிர்பார்கின்றனர். இது என்றைக்கு பெரிய அளவில் பிரச்னை பூதாகரமாக வெடிக்கும் என்பது தெரியவில்லை. கோப்புகள் சேதமடைந்தால் பிரச்னை விஸ்வரூபம் எடுக்கும். அப்போதுதான் இதற்கு விடைகிடைக்கும் என்று கூறி புலம்புகின்றனர் பெண் ஊழியர்கள். புதுச்சேரி அரசு வரும்முன் காக்கப்போகிறதா அல்லது வந்தபின் பார்த்து கொள்ளப் போகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label