OUR CLIENTS
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் சிஸ்டம் மாற்றிய வடக்கு போலீஸ்!
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் சிஸ்டம் மாற்றிய வடக்கு போலீஸ்! Posted on 02-Jul-2018 வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் சிஸ்டம் மாற்றிய வடக்கு போலீஸ்!

வேலூர், ஜூலை 2-

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் சிஸ்டம் மாற்றியாச்சு என்று சொல்கின்றனர் வடக்கு காவல் நிலைய காவலர்கள்.

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் படு பிசியாக இயங்கி வருகின்றன அனைத்து கடைகளும் என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு காரணம் ஒரு நாள் இரவு 11 மணிக்கு மேல் கடை வைக்க அதாவது வடக்கு போலீசாரால் ஒரு கடைக்கு தலா ரூ400 வசூல் செய்யப்பட்டது. இதற்கு பின்னர் வந்த காவல் ஆய்வாளர் நாகராஜன் சிஸ்டம் மாற்றியாச்சு என்று புது உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று கூறப்படுகிறது. அந்த உத்தரவுப்படி ஒரு கடைக்கு தலா ரூ.600 தர வேண்டுமாம். அப்படி மாமூல் தரும் கடைகள் மட்டும் 24 மணி நேரமும் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது என்று சக ஹோட்டல்காரர்கள் தரப்பில் புகாராக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவனை சந்தித்து புகார் கொடுக்க ஆயத்தமானார்கள். காவல் துறையிடம் மோதினால் எங்கள் மீது பொய் வழக்கு போடுவதோடு நாங்கள் தொடர்ந்து தொழில் செய்ய முடியாமல் இடையூறு ஏற்படுத்துவார்கள் என்று புகார் கூறப்படுகிறது. இதனால்தான் நாங்கள் விட்டு விட்டோம் என்று ஆதங்கத்துடன் தெரிவித்தனர். சில ஹோட்டல்கள் மட்டும் நள்ளிரவு வரையும், சில ஹோட்டல்கள் இரவு முழுவதும் இடைவிடாது இயங்குகின்றன. இதுதான் இதில் உள்ள சிதம்பர ரகசியமாகும். 11 மணிக்கு மேல் கடை வைத்து கொள்ள புது சிஸ்டப்படி தலா ரூ.600 செலுத்த எழுதப்படாத சட்டம் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்று சமூக ஆர்வலர்களும், அப்பாவி ஹோட்டல்காரர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற தகவல்கள் இதுநாள் வரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் செவிகளுக்கு எட்டாமல் இருக்குமா? என்ற சந்தேகம் அனைவரது மனதிலும் எழுந்துள்ளது. இதுபோன்ற சட்டங்கள் தொடருமா? அல்லது விலக்கிக் கொள்ளப்படுமா? அல்லது இரவு 11 மணிக்குள் அனைத்து கடைகளையும் அடைத்து கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்பதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன்தான் அறிவிக்க வேண்டும் என்கின்றனர் ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label