OUR CLIENTS
வேலூர் மாவட்டத்தில் குடிபோதையில் வாகனங்களை இயக்கினால் கடும் தண்டனை: ஆட்சியர் எச்சரிக்கை!
வேலூர் மாவட்டத்தில் குடிபோதையில் வாகனங்களை இயக்கினால் கடும் தண்டனை: ஆட்சியர் எச்சரிக்கை! Posted on 02-Jul-2018 வேலூர் மாவட்டத்தில் குடிபோதையில் வாகனங்களை இயக்கினால் கடும் தண்டனை: ஆட்சியர் எச்சரிக்கை!

வேலூர், ஜூலை 2-

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் செல்லும் கிரீன்சர்க்கி சர்வீஸ் ரோட்டில் இருந்து சென்னை நெடுஞ்சாலையை இணைக்கும் இடத்தில் நேற்றுமுன்தினம் 30.6.2018 மதியம் 3 மணியளவில் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் ஆய்வு பணிக்காக ஆற்காடு செல்லும் போது ஓசூரிலிருந்து சென்னை நோக்கி எம் சேன்டு ஏற்றி வந்த சரக்கு லாரி டிஎன்: 70 டி -5706 என்ற எண்ணுடைய சரக்கு லாரி சாலையில் தாறுமாறாக செல்வதை நேரில் பார்த்த மாவட்ட ஆட்சியர் அந்த சரக்கு லாரியை மடக்கி பிடித்து ஆய்வு செய்த போது லாரியின் ஓட்டுநர் தமிழரசன் (22) அதிகப்படியாக மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி வந்துள்ளதையும், சரக்கு குறித்து ரசீதுகளை ஆய்வு செய்த போது அதிகப்படியான பாரம் ஏற்றி வந்ததும் கண்டறிந்து உடனடியாக போக்குவரத்து காவல் துறையினருக்கும், வட்டார போக்குவரத்து அலுவலருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு வாகனம் சிறைபிடிக்கப்பட்டு வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் சாலையில் செல்லும் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தும் வகையிலும் விபத்துகளை தடுத்திடும் வகையிலும், குடிபோதையில் வானத்தை ஓட்டும் ஓட்டுநர்களையும், அதிகப்படியான சரக்குகளையும் (ஓவர்லோடு) ஏற்றிச்செல்லும் வாகனங்களையும் மோட்டார் வாகன சட்டத்துக்கு மாறாக சரக்கு வாகனங்களை ஓட்டிச் செல்லும் வாகனங்களையும் சிறைபிடித்து தண்டனை வழங்க வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் காவல் போக்குவரத்து அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் உத்தரவிட்டார். மேலும் லாரி ஓட்டுநர் மது அருந்தியது குறித்து பரிசோதித்தபோது 97.9 சதவிகிதம் மது அருந்தியுள்ளது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து மோட்டார் வாகன சட்டம் 185ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகன ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமமும் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மாறாக அதிகப்படியான பாரம் ஏற்றி வந்ததினால் வாகனத்தின் அனுமதி சீட்டும் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Label