OUR CLIENTS
தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க கர்நாடகத்துக்கு ஆணையம் உத்தரவு! சட்டசபையில் முதல்வர் பழனிசாமி பெருமிதத்துடன் விளக்கம்
தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க கர்நாடகத்துக்கு ஆணையம் உத்தரவு! சட்டசபையில் முதல்வர் பழனிசாமி பெருமிதத்துடன் விளக்கம் Posted on 03-Jul-2018 தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க கர்நாடகத்துக்கு ஆணையம் உத்தரவு! சட்டசபையில் முதல்வர் பழனிசாமி பெருமிதத்துடன் விளக்கம்

சென்னை, ஜுலை 3-

தமிழகத்துக்கு ஜூலையில் 31.24 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகத்தில் உள்ள அணைகளில் இருந்து வழங்க நேற்று டில்லியில் நடைபெற்ற காவிரி ஆணைய முதல் கூட்டத்தில் கர்நாடகத்துக்கு காவிரி ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் காவிரி ஆணைய முதல் கூட்ட நடவடிக்கைகள் பற்றி முதல்வர் கூறிய விவரம்: புதுடில்லியிலே காவேரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம்  தலைவர்  மசூத் உசேன் தலைமையிலே இன்றைக்கு(நேற்று) நடைபெற்றது.

சுமார் 4 மணி நேரம் அந்த கூட்டம் நடைபெற்றது. நான்கு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்திலே, இன்றையதினம்(நேற்று) இந்த ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன், இது வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆகவே, அப்படி வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆணையத்தின் முதல் கூட்டம் வாயிலாக இன்றைக்கு ஒரு நல்ல தீர்வு எட்டப்பட்டு, நம்முடைய மாநிலத்திற்கு இந்த ஜூலை மாதம், வழங்க வேண்டிய நீரின் அளவு 31.24 டிஎம்சி, அதை இந்த மாதம் வழங்க வேண்டும் என்று காவேரி மேலாண்மை ஆணையத்தில் முடிவு எடுக்கப்பட்டு இன்றைக்கு(நேற்று) ஆணை வழங்கப்பட்டுள்ளது.

காவேரி நீர் முறைப்படுத்தும் குழு, கர்நாடக அணையில் உள்ள நீர் இருப்பினை கருத்தில் கொண்டு நீரை விடுவிக்க ஆணையம் ஆணையிட்டுள்ளது. மேலும்,  ஒவ்வொரு மாதவாரியாக நமக்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்கும். ஒவ்வொரு 10 தினங்களுக்கு ஒருமுறை கணக்கிட்டு, அந்த கணக்கின்படி அணைக்கு எவ்வளவு நீர் வருகின்றதோ, கர்நாடகத்திற்கு எவ்வளவு நீர் வருகிறதோ, அந்த நீரை   நமக்கு பகிர்ந்தளிப்பார்கள் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து, இது வரலாற்று சிறப்புமிக்க ஒரு சாதனை. ஜூன் மாதம் 9.19 டிஎம்சி நமக்கு கிடைக்க வேண்டும். அதாவது, ஜூன் மாதம் நமக்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவு 9.19 டிஎம்சி.  ஆனால் 11 டிஎம்சி நீர் நமது அணைக்கு வந்திருக்கிறது.

ஜூலை மாதத்தை பொறுத்தவரைக்கும், 31.24 டிம்எசி, தண்ணீர் நமக்கு கர்நாடக அரசால் வழங்கப்பட வேண்டும். அதை இந்த ஆணையம் அதை உறுதி செய்து இருக்கிறது. இந்த ஜூலை மாதத்திற்குள் நமக்கு கர்நாடக அரசு அவர்களுடைய அணையிலிருந்து 31.24 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று ஆணையம் ஆணையிட்டு இருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை அவையிலே தெரிவித்துக் கொள்கிறேன். 
ஆகஸ்ட் மாதத்தை  பொறுத்தவரைக்கும், 45.95 டிஎம்சி, செப்டம்பர் மாதம் 36.76 டிஎம்சி, அக்டோபர் மாதம் 20.22 டிஎம்சி, நவம்பர் மாதம் 13.78 டிஎம்சி, டிசம்பர் மாதம் 7.35 டிஎம்சி, ஜனவரி மாதம் 2.76 டிஎம்சி, பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை 2.50 டிஎம்சி. ஆக மொத்தம்,  177.25 டிஎம்சி, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு நம்முடைய தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.

இந்த முறைமைப்படி காவேரி மேலாண்மை ஆணையம் ஆணையிட அந்த ஆணையத்தை காவேரி நீர் முறைப்படுத்தும் குழு நடைமுறைப்படுத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தமிழக முதல்வர் கே. பழனிசாமி சட்டப் பேரவையில் உணர்வுப்பெருக்கோடு ஜூலை மாதத்துக்கான காவிரி நீர் ஒதுக்கீடு பற்றிக் குறிப்பிட்டார்கள். காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் ஜூலை 5ம் தேதி பெங்களூரில் நடைபெறும் என தகவல் தெரிகிறது.

Label