OUR CLIENTS
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் Posted on 03-Jul-2018 தமிழகத்தின் பெரும்பாலான  பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

புதுடெல்லி, ஜுலை 3-

இந்த ஆண்டு பருவமழை, வழக்கத்தை விட 17 நாட்கள் முன்னதாக இந்தியா முழுவதும் பரவலாக பெய்யக் கூடும் என்று கடந்த வாரம் டில்லி வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

சில இடங்களில் கனமழை அல்லது மிக கனமழையும் உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் மிக கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இமாச்சலத்தை ஒட்டிய மேற்கு வங்கம், சிக்கிம், பீகார், அசாம், மேகாலயா மாநிலங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஹரியானா, சண்டிகர், சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒதிஷா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா பகுதிகளில் நாளை கனமழை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவா மாநிலத்தின் கொங்கண், ராயலசீமா, தமிழ்நாடு, லட்சத்தீவுகள் மற்றும் கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இன்று அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களின் ஒருசில பகுதிகளில் கனமழை மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு, இமாலயப் பகுதியையொட்டிய மேற்கு வங்கம், சிக்கிம் மற்றும் பீகாரில் கனமழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களின் உட்பகுதிகளிலும் கர்நாடகா கடலோரப் பகுதியிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

4 மாத பருவமழை காலம், வழக்கமாக ஜூன் மாதம் 1ம் தேதி துவங்கி செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை நீடிக்கும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை 3 நாட்கள் முன்னதாக மே 29ஆம் தேதியே கேரளாவில் தொடங்கி விட்டது. ஜூன் மாதத்தின் முதல் பாதி, மேற்கு கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்தது. 
சென்னை வானிலை ஆய்வு மையமும் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Label