OUR CLIENTS
அமைச்சர் சி.வி.சண்முகம் மயிலம் தொகுதியில் போட்டியிட முடிவு!
அமைச்சர் சி.வி.சண்முகம் மயிலம் தொகுதியில் போட்டியிட முடிவு! Posted on 03-Jul-2018 அமைச்சர் சி.வி.சண்முகம் மயிலம் தொகுதியில் போட்டியிட முடிவு!

விழுப்புரம், ஜூலை 3-

விழுப்புரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சி.வி.சண்முகம். இவருக்கும், எம்பியும், வடக்கு மாவட்ட செயலாளருமான மருத்துவர் இரா.லட்சுமணனுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது.

இன்று வரை இருவரும் வடதுருவம், தென்துருவம் போன்று செயல்படுகின்றனர். சி.வி.சண்முகம் அமைச்சர் என்பதால் சில ஜால்ராக்கள் இவர் பின்னால் தொடர்ந்து இருந்து வருகின்றனர். சி.வி.சண்முகம் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட காரணமே திண்டிவனம் தொகுதி ரிசர்வ் தொகுதியானதால்தான் இந்த முடிவு எடுத்தார். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் சி.வி.சண்முகம் விழுப்புரம் தொகுதியை தேர்வு செய்ததும்தான் தாமதம், விழுப்புரத்தின் விடிவெள்ளி பொன்முடி திருக்கோயிலூர் தொகுதியை தேர்வு செய்தார். ஆனால் சி.வி.சண்முகம் விழுப்புரம் தொகுதி பக்கமே வருவது இல்லை. சென்னைக்கும், திண்டிவனத்துக்கும் இடையே தனது பயணத்தை வைத்து கொண்டார். ஏதாவது அரசு விழாக்கள் இருந்தால் மட்டுமே விழுப்புரம் பக்கம் தலைகாட்டுகிறார் சி.வி.சண்முகம்.
இதனால் விழுப்புரம் தொகுதி மக்கள் ஏன் சி.வி.சண்முகத்துக்கு ஓட்டு போட்டோம் என்று எண்ணி நொந்து கொண்டுள்ளனர். இதை சூசகமாக தெரிந்து கொண்ட சி.வி.சண்முகம் இனி நாம் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட தேவையில்லை. இதனால் தொகுதி மக்களின் ஆதரவும் நமக்கு தேவையில்லை என்று முடிவு செய்துவிட்டார். இதனால் விழுப்புரம் பக்கமே அவர் தலைகாட்டுவது இல்லை. அடுத்த தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார் என்று அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோதிலும் விழுப்புரம் நகராட்சி பகுதியில் எவ்வித வளர்ச்சிப்பணிகளும் நடைபெறவில்லை. மக்களின் அடிப்படை தேவைகளை கூட அமைச்சர் சி.வி.சண்முகம் நிறைவேற்றித் தரவில்லை என்று ஆதங்கத்துடன் தொகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். விழுப்புரத்தில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் திமுக ஆட்சிகாலத்தில் அமைச்சர் பொன்முடி கொண்டு வந்தவைதான் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த உண்மை நிலை விழுப்புரம் தொகுதி மக்களுக்கு நன்கு தெரியும். திமுக ஆட்சியில் அவர்கள் விட்டுச் சென்ற பணிகள் கூட தொடர ஆளில்லாமல் அப்படியே கிடப்பில் கிடக்கிறது. மக்களுக்கு அடிப்படை தேவையான சாலைவசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, வாய்க்கால் வசதி போன்றவை எதுவும் செய்து தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விழுப்புரம் தொகுதி மக்கள் சொல்லொனா துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். இதே திமுக ஆட்சியாக இருந்தால் அமைச்சர் பொன்முடி தொகுதி மக்களின் விருப்பத்துக்கேற்ப பணிகளை விரைந்து செயல்படுத்துவார் என்று பரவலாக பேச ஆரம்பித்து விட்டனர். 

சி.வி.சண்முகம் விழுப்புரம் தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பதால் பொதுமக்களுக்கு எவ்வித பயனும் இல்லை என்றே சொல்லலாம். அரசு சட்டக் கல்லூரி கொண்டு வந்துள்ளார். இதைத்தவிர சி.வி.சண்முகம் வேறெந்த பணிகளையும் அவர் விழுப்புரத்துக்கு கொண்டு வரவில்லை என்றே சொல்ல வேண்டும். இவர் அமைச்சராக இருப்பதால் சில ஜால்ராக்கள், அடிப்பொடிகள் இவர் பின்னால் வால் பிடித்து சுற்றி வருகின்றனர். ஆனால் உண்மையில் விருப்பப்பட்டு யாரும் சி.வி.சண்முகம் பின்னால் செல்லவில்லை என்பதுதான் நிதர்சன உண்மையாகும். வர வர சி.வி.சண்முகம் விழுப்புரம் தொகுதியில் சரிவை சந்தித்து வருகிறார் என்பதே உண்மை.

இதனால்தான் வரும் தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்து அந்த தொகுதியில் அடிக்கடி வலம் வருவதாக சொல்லப்படுகிறது. அந்த மயிலம் தொகுதியில் சி.வி.சண்முகத்தின் உறவினர்கள் அதிகம் இருப்பதால் அந்த தொகுதியில் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்று முடிவு செய்து விட்டார் என்றும் சொல்லப்படுகிறது. எது எப்படியோ சி.வி.சண்முகத்ததை நம்பி வாக்களித்த விழுப்புரம் தொகுதி மக்கள் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர் என்பது மட்டுமே உண்மை. இனி வரும் காலங்களிலாவது ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வாக்காளர்கள் வேட்பாளரின் உண்மை முகத்தை அறிந்து கொண்டு வாக்களிக்க முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Label