OUR CLIENTS
கேட்டது கிடைக்காததால் அதிருப்தியில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்!
கேட்டது கிடைக்காததால் அதிருப்தியில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்! Posted on 03-Jul-2018 கேட்டது கிடைக்காததால் அதிருப்தியில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்!

சென்னை, ஜூலை 3-

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டது கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளார் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்.

அமைச்சர வையை மாற்றியமைக்கும்படி முதல்வர் எடப்பாடியை வலியுறுத்தி வருகிறார் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன். உடுமலைக்காக களத்தில் குதித்துள்ளது ஐஏஎஸ் அதிகாரிகள் குழு ஒன்று. தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சராக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் நியமிக்கப்பட்டவர் உடுமலை ராதாகிருஷ்ணன். எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதும் வீட்டுவசதி துறை அமைச்சராகவே நீடித்தார். இந்நிலையில் அதிமுகவில் இருந்து பிரிந்த ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைந்தபோது துணை முதல்வர் அந்தஸ்துடன் ஜெயக்குமாரிடம் இருந்த நிதித்துறையையும், ராதாகிருஷ்ணனிடம் இருந்த வீட்டு வசதித்துறையையும் பறித்து ஓபிஎஸ்சுக்கு ஒதுக்கினார் எடப்பாடி பழனிச்சாமி.

அதற்கு முன்பு ராதாகிருஷ்ணனை அழைத்துப் பேசிய எடப்பாடி பழனிச்சாமி டெல்லியின் வலியுறுத்தல்கள் அதிகமாக இருக்கிறது. வீட்டு வசதி துறையை விட்டு கொடுங்கள். சில மாதங்கள் கடந்ததும் அமைச்சரவையை மாற்றியமைப்போம். அப்போது வருவாய் மிகுந்த துறையை ஒதுக்குகிறேன். இப்போதைக்கு கால்நடையை ஏற்றுக் கொள்ளுங்கள் என அழுத்தம் கொடுக்க, அதனை தவிர்க்க முடியாமல் விட்டுக் கொடுத்தார் ராதாகிருஷ்ணன்.

இந்தநிலையில் ஓபிஎஸ் இணைந்து 10 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் அமைச்சரவையை மாற்றியமைக்கவில்லை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அமைச்சரவையை மாற்றியமைக்க வேண்டுமென எடப்பாடியிடம் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியபோதும் அவர் அக்கறை காட்டாததால் கொடுத்த வாக்கை மீறுகிறார் என எடப்பாடி மீது ஏக அதிருப்தியில் இருக்கிறார் உடுமலை. இப்படிப்பட்ட சூழலில் டெல்லியின் சொல்லுக்கு மட்டுமே எடப்பாடி கட்டுப்படுகிற நிலை இருப்பதால் பிரதமர் அலுவலக அதிகாரிகளிடமும், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவிடமும் நட்புடன் இருக்கும் தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் சிலர் உடுமலைக்காக காய்களை நகர்த்தி வருகின்றனர் என்கிறது கோட்டை வட்டாரம் என்று சொன்னால் அது மிகையாகாது.

அத்துடன் கூவத்தூரில் எம்எல்ஏக்களை அடைத்து வைத்து எடப்பாடியை முதல்வராக ஏற்க வேண்டுமென சசிகலா வலியுறுத்தியதை அப்போது ஏற்றுக் கொண்டனர். இதற்காக தங்க நகைகள், கோடிகளில் பணம் என 99 சதவீத எம்எல்ஏக்களுக்கு கொடுக்கப்பட்டது. பணத்துக்கு முதல்வர் பொறுப்பேற்க அப்போது சுமார் 110 கோடியை எடப்பாடிக்காக உடுமலை திரட்டித்தர, இதனை கடனாகத்தான் வாங்குகிறேன், திருப்பித் தந்துவிடுகிறேன் என்று சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதில் பாதை தொகைதான் திருப்பி தரப்பட்டுள்ளது. எடப்பாடிக்காக அன்றைக்கு உதவியர் உடுமலை. ஆனால் உடுமலைக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுக்கிறார் எடப்பாடி. இந்த தகவலை சொல்லி நெருங்கிய தொடர்புகளில் எல்லாம் ஆதங்கப்பட்டு வருகிறார் உடுமலை. இதற்காகத்தான் உடுமலை ராதாகிருஷ்ணனுக்காக குதித்துள்ளனர் ஐஏஎஸ் அதிகாரிகள் லாபி என்கிறார்கள் அதிகாரிகள். எது எப்படியோ உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு அல்வா கொடுத்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி என்றுதான் சொல்ல வேண்டும். இந்த பிரச்னையை எப்படி கையாளப் போகிறார் உடுமலை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label