OUR CLIENTS
அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமல்!
அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமல்! Posted on 03-Jul-2018 அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக்  பொருட்களுக்கான தடை அமல்!

மதுரை, ஜூலை 3-

மதுரை அரசு அலுவலகங் களில் நேற்று முதல் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் ஜூலை 2ம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழகம் முழுவதும் ஜனவரி 1 முதல் தடை விதிக்கப்படுவதாகத் தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இதை நடைமுறைப்படுத்தும் வகையில் மதுரை மாநகராட்சி, அனைத்துத் துறைகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான செயல் திட்டம் தயாரித்தது.

இதன் முதல் நடவடிக்கையாக ஜூலை 2ம் தேதி முதல் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் தம்பளர், பிளாஸ்டிக் விரிப்புகள் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவித்தார். மேலும், அனைத்து அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகளில் இது முழுமையாக அமல்படுத்தப்படும். அதைத் தொடர்ந்து தனியார் நிறுவனங்கள், பொது இடங்கள் என படிப்படியாக பிளாஸ்டிக் தடை விரிவுபடுத்தப்படும். அதை உற்பத்தி செய்யும் இடங்களிலேயே தடுப்ப தற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மக்காத பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படக் கூடிய சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்பட உள்ளன.

அதேபோல, காய்கறி விற்பனை செய்வோர், இறைச்சிக் கடைகள், உணவகங்களில் பாலித்தீன் பைகளுக்கு மாற்றாக வாழை இலை, தாமரை இலை, பாக்கு மட்டை தட்டு போன்றவற்றைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படும். ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்களுக்கு, அவற்றுக்கு மாற்றான பொருள்கள் தயாரிப்புக்குத் தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்படும். இதுபோன்ற தொடர் நடவடிக்கைகள் மூலமாக தமிழக முதல்வர் அறிவிப்பின்படி வரும் ஜனவரி 1ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு இல்லாத மாவட்டமாக உருவாக்கப் படும் என்றார்.

Label