OUR CLIENTS
14 கிலோ கஞ்சா கடத்திய 6 பேர் கைது இருச்சக்கர வாகனங்கள் பறிமுதல்!
14 கிலோ கஞ்சா கடத்திய 6 பேர் கைது இருச்சக்கர வாகனங்கள் பறிமுதல்! Posted on 03-Jul-2018 14 கிலோ கஞ்சா  கடத்திய 6 பேர் கைது இருச்சக்கர வாகனங்கள் பறிமுதல்!

மதுரை, ஜூலை 3-

மதுரை ஊரகப் பகுதிகளில் 14 கிலோ கஞ்சா கடத்திய 6 பேரை போலீஸார் கைது செய்து 4 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

மதுரை ஊரகப் பகுதிகளான கருப்பாயூரணி, நாகமலைபுதுக்கோட்டை பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸா ருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் வாகனச்சோதனையில் ஈடுபட உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் நாரனக்குடி கண்மாய் பகுதியில் கருப்பாயூரணி போலீஸார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் வந்த வண்டியூர் சதாசிவநகரைச் சேர்ந்த பொன்னுசாமி(62), மதிச்சியம் ரஞ்சித்(19), சதுரகிரி(20) ஆகியோரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது மூவரும் இருசக்கர வாகனங்களில் கஞ்சா கடத்திச்செல்வது தெரிய வந்தது.

இதையடுத்து மூவரையும் போலீஸார் கைது செய்து இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதே போல கருப்பாயூரணி பள்ளி அருகே போலீஸார் நடத்திய சோதனையில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய மதிச்சியத்தைச் சேர்ந்த குணசேகரன்(20) கைது செய்யப்பட்டார்.
மதுரை அருகே உள்ள நாகமலைபுதுக்கோட்டை முனியாண்டி கோவில் பகுதியில் போலீஸார் நடத்திய சோதனையில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திச்சென்ற முடக்குச்சாலையைச் சேர்ந்த வசந்த்(19), தாராபட்டி மேலத்தெருவைச் சேர்ந்த அருண்குமார்(21) ஆகிய இருவரும் பிடிபட்டனர். இருவரையும் நாகமலை புதுக்கோட்டை போலீஸார் கைது செய்து அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரிடம் இருந்தும் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Label