OUR CLIENTS
அமர்நாத் யாத்திரைக்கு சென்ற 3 பேர் பலி
அமர்நாத் யாத்திரைக்கு சென்ற 3 பேர் பலி Posted on 04-Jul-2018 அமர்நாத் யாத்திரைக்கு சென்ற 3 பேர் பலி

ஸ்ரீநகர், ஜுலை 4-

ஜம்மு&காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் தோன்றியுள்ள பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் ஆண்டு தோறும் பயணம் செய்வார்கள்.

இந்த ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த புஷ்கர் ஜோஷி என்பவர் இந்த யாத்திரையில் கலந்து கொண்டு நேற்று முன்தினம் பிராரிமார்க் மற்றும் ரைல்பத்ரி பாதை வழியாக சென்றபோது பாறையில் இருந்து சரிந்து விழுந்த கல் அவரை தாக்கியதில் காயமடைந்தார். 

அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். பல்தல் மலையடிவார முகாமில் உள்ள பக்தர்களுக்கான பொது சமையல் கூடத்தில் தோட்டா ரத்னம் (75) என்ற பெண் நேற்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் ஆந்திர மாநிலம், பிவாலயம் பகுதியை சேர்ந்தவர் ஆவர்.
இதேபோல், பனி லிங்க குகையின் அருகேயுள்ள சங்கம் பகுதியில் ராதா கிருஷ்ண சாஸ்திரி (65) என்ற பெண்ணும் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவர் ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவர். இந்த ஆண்டின் யாத்திரையில் இதுவரை 6 யாத்திரீகர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Label