OUR CLIENTS
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மற்றொரு காதல் சர்ச்சை? ஷாரிக் மீது நடிகை ஐஸ்வர்யா தத்தா குற்றச்சாட்டு!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மற்றொரு காதல் சர்ச்சை? ஷாரிக் மீது நடிகை ஐஸ்வர்யா தத்தா குற்றச்சாட்டு! Posted on 04-Jul-2018 பிக் பாஸ் நிகழ்ச்சியில் மற்றொரு காதல் சர்ச்சை? ஷாரிக் மீது நடிகை ஐஸ்வர்யா தத்தா குற்றச்சாட்டு!

சென்னை, ஜூலை 4-

பிக் பாஸ் நிகழ்ச்சியை இளைய தலைமுறையினர் விரும்பி கண்டு களிக்கின்றனரர். இந்நிலையில் கடந்த ஆண்டு நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா, & ஆரவ் இடையேயான காதல் சர்ச்சையை யாராலும் மறக்க முடியாது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய சக போட்டியாளரான ஆரவ்வை நடிகை ஓவியா காதலித்தார். ஆனால் ஓவியாவின் காதலை ஆரவ் ஏற்கவில்லை.

இதனால் மனத்தளவில் மிகவும் பாதிக்கப்பட்டார் ஓவியா. இதையடுத்து அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையும் வித்தியாசமாக அமைந்தன. மீண்டும் மீண்டும் ஆரவ்விடம் சென்று ஐ லவ் யூ எனக் கூறினார். ஆனால் ஆரவ் தொடர்ந்து ஓவியாவின் காதலை ஏற்க மறுக்கவே, திடீரென அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் குதித்தார். இதனால் இதர போட்டியாளர்கள் மிகவும் பரபரப்பு அடைந்து, அவரை நீச்சல் குளத்திலிருந்து மேலே கொண்டுவந்தார்கள். இதையடுத்து மனநல மருத்துவரை அழைத்து ஓவியாவைப் பரிசோதிக்கும்படி போட்டியாளர்கள் பிக் பாஸ் நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். மனநல மருத்துவர் பிக் பாஸ் அரங்குக்குள் நுழைந்து ஓவியாவைப் பரிசோதித்தார். காதல் தோல்வியால் போட்டியை விட்டு வெளியேற எண்ணினார் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சியை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட ஓவியா, காதல் தோல்வியால் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது எதிர்பாராத திருப்பம்.

இந்நிலையில் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியிலும் மற்றுமொரு காதல் சர்ச்சை உருவாகியுள்ளது.  கொல்கத்தாவைச் சேர்ந்த நடிகை ஐஸ்வர்யா தத்தா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இவர் தற்போது பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றுள்ளார்.

நடிகை கமலா காமேஷின் மகள் உமா ரியாஷ் கான் -நடிகர் ரியாஸ் கானின் மகன், ஷாரிக். ஜிவி பிரகாஷ் நடித்த பென்சில் படத்தில் நடித்துள்ளார். இவரும் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளார். பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா தத்தா மீதான தனது விருப்பத்தைத் தெரிவித்தார் ஷாரிக். இதுபற்றி தன் நண்பர்களான யாஷிகா, மஹத் ஆகியோரிடமும் விவாதித்துள்ளார் ஐஸ்வர்யா. இந்நிலையில் இவ்விருவர் தொடர்புடைய காதல் சர்ச்சை நேற்று ஒளிபரப்பானது. 

உண்மையில் நேற்றுமுன்தினம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா, மஹத், யாஷிகா இடையே நிகழ்ந்த உரையாடல்களை வைத்துக்கொண்டு என்ன பிரச்னையை விவாதித்தார்கள் என்று புரிந்துகொள்ளவே முடியவில்லை. எதனால் யாஷிகா மீது ஐஸ்வர்யா கோபம் கொண்டார் என்று உன்னிப்பாகக் கவனித்தும் புரிந்துகொள்ள முடியாத புதிராக இருந்தது. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது, ஏற்கெனவே ஒரு காதலி இருந்தும் ஏன் என்னிடம் விருப்பம் தெரிவித்தாய் என்று ஷாரிக் மீது வெளிப்படையாகவே குற்றம் சுமத்தினார் ஐஸ்வர்யா. 
ஷாரிக்கின் முன்னாள் காதலி, எம்பிராய்டரி போட்ட சட்டையை அவருக்கு அனுப்பியுள்ளார். அதைப் பார்த்ததும் உணர்வு பூர்வமானார் ஷாரிக். இரண்டரை வருடங்களாக ஒரு பெண்ணைக் காதலித்ததாகவும் குடும்பப் பிரச்னை காரணமாகப் பிரிய நேர்ந்ததாகவும் யாஷிகாவிடம் தனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார். இதுதான் பிரச்னையை உருவாக்கிவிட்டது. 

முக்கியமான ரிலேஷன்ஷிப் வெளியே இருக்கும்போது என் பின்னாடி ஏன் வந்தாய் என்று ஷாரிக்கின் முகத்துக்கு நேராகக் கேள்வி எழுப்பினார் ஐஸ்வர்யா. இதை எதிர்த்துக் கேள்வி எழுப்பினார் யாஷிகா. கூடவே இந்த விவாதத்தில் மஹத்தும் இணைந்துகொள்ள, ஒரே கருத்து மோதல்களாக நேற்றைய நிகழ்ச்சி சென்றது. யாஷிகா, மஹத்திடம் தனது கோபத்தை நேரடியாகவே வெளிப்படுத்தினார். நான் வெளியே செல்ல எண்ணுகிறேன். என்னை எல்லோரும் நாமினேட் செய்யுங்கள் என்று கூறி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார் ஐஸ்வர்யா. பலரும் அவரைச் சமாதானப்படுத்த முயன்றபோது, யாரும் என் உணர்வுகளுடன் விளையாட வேண்டாம் என்றார். இதனால் பிரச்னை மிகவும் தீவிரமானது. 

இதுபற்றி யாஷிகாவிடம் சிலர் விசாரித்தபோது, ஷாரிக்குக்காக ஐஸ்வர்யா வெளியேற நினைக்கிறார். ஷாரிக் மீது அவருக்கு ஒருவிதமான உணர்வு உள்ளது. அதனால் ஷாரிக்கிடமிருந்து தள்ளி நிற்க எண்ணுகிறார். எனவே இந்த முடிவு என்று விளக்கம் அளித்தார். ஏற்கெனவே ஒரு காதல் இருந்ததை என்னிடம் முன்பே சொல்லியிருந்தால் நான் அதற்கேற்றாற்போல் நடந்துகொண்டிருப்பேன் என்று ஷாரிக்கிடம் குறைபட்டுக்கொண்டார் ஐஸ்வர்யா. ஷாரிக்கும் தன் தவறுக்கு வருந்தினார்.

நேற்றுமுன்தினம் முளைத்த இந்த கருத்துமோதல்களால் ஐஸ்வர்யா -ஷாரிக் இடையேயான காதல் சர்ச்சை வரும் நாள்களில் மேலும் விஸ்வரூபம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Label