OUR CLIENTS
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சாத்தியம் இல்லை
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சாத்தியம் இல்லை Posted on 05-Jul-2018 நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சாத்தியம் இல்லை

புதுடெல்லி, ஜுலை 5-

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தற்போது சாத்தியம் இல்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். வருடத்தின் பல மாதங்களில் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நடப்பதால், வளர்ச்சி பணிகள் பாதிப்பதாலும், மக்கள் பணம் செலவழிவதாலும் அதை தவிர்க்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது என்று அவர் கருதுகிறார். அவரது யோசனைக்கு சட்ட ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது. 2019&ம் ஆண்டு மற்றும் 2024&ம் ஆண்டு என இரண்டு கட்டங்களாக ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

அதாவது, 2021&ம் ஆண்டுக்குள் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் 2019&ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும், மற்ற மாநிலங்களில் 2024&ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும் சிபாரிசு செய்துள்ளது. இதை நடைமுறைப்படுத்த சில மாநில சட்டசபைகளின் பதவிக்காலத்தை குறைக்க வேண்டி இருக்கும். வேறு சில மாநிலங்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டி இருக்கும். இதற்காக அரசியல் சட்டத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் திருத்தம் செய்ய சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறியதாவது:-
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு  ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சட்டத்தில் இடமில்லை; சட்டத்திருத்தம் கொண்டு வந்தால்தான் இது சாத்தியம் என அவர் கூறியுள்ளார். 

Label