OUR CLIENTS
காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை! தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை
காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை! தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை Posted on 05-Jul-2018 காவலர்களுக்கு  வாரம் ஒரு நாள் விடுமுறை! தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை

சென்னை, ஜுலை 5-

காவல் துறையில் உள்ள ஆடர்லி அமைப்பு ஒழிக்கப்படவேண்டும் என்ற மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதை விசாரித்த நீதிபதி கிருபாகரன்,”தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், காவலர் களுக்கும் ஏன் விடுமுறை வழங்கப்படக்கூடாது” என்று கேள்வி எழுப்பினார்.

”மன அழுத்தத்தில் இருந்து விடுபெறவும், புத்துணர்ச்சி பெறவும் அவர்களுக்கு இந்த விடுமுறை உதவியாக இருக்கும்” என்று கூறினார். மேலும்,”காவல்துறையினர் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. காவலர்களை தாக்கும் மக்களுக்கு தைரியம் அதிக அளவில் உள்ளது.

காவலர்களுக்கு இதனால் பாதுகாப்பு இல்லை. அவர்களுடைய விதி என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். “காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு தகுந்த முடிவை தமிழக அரசு எடுக்கவேண்டும்” என்று கிருபாகரன் அறிவுறுத்தி வழக்கை ஜூலை 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Label