OUR CLIENTS
காலையில் கட்சி தாவியருக்கு மாலையில் அமைச்சர் பதவி!
காலையில் கட்சி தாவியருக்கு மாலையில் அமைச்சர் பதவி! Posted on 05-Jul-2018 காலையில் கட்சி தாவியருக்கு மாலையில் அமைச்சர் பதவி!

காந்திநகர், ஜுலை 5-

குஜராத் சட்டசபையில் காங். எம்.எல்.ஏ.வாக இருந்தவர்  குவர்ஜி பவாலியா. கட்சியில் மூத்தவரான அவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டார். ஆனால் அவரை விட ஜூனியரான  பரேஷ் தனானிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்தது. இதனால் கடந்த ஓராண்டாக அதிருப்தியில் இருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் டில்லியில் காங். தலைவர் ராகுலை சந்தித்து தன்னை குஜராத் காங்கிரசில் புறக்கணிப்பதாக முறையிட்டார்.அதை ராகுல் கண்டுகொள்ளவில்லை.
இதனால் கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த பவாலியா, இனி வேறு விதமாக சிந்திக்கவேண்டியது தான். எனது தொகுதி வளர்ச்சிஅடைய என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்ய வேண்டியது தான் எதிர்க்கட்சி என்பதால் என் தொகுதி புறக்கணிக்கப்படுகிறது  என்று பகிரங்கமாகவே கூறினார். இதையடுத்து அவரை வலைக்க பா.ஜ.. வலை வீசி வந்தது. அதில் அவரும் விழுந்து விட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில்  தடாலடியாக  காங்கிரசில் இருந்து விலகுவதாக பவாலியா அறிவித்தார். கட்சிதாவலில் தனது பதவி பறிபோய்விடுமே என்பதால் எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்து சபாநாயகருக்கு கடிதம் அளித்தார். அதே சமயத்தில் காங்கிரசில் இளையவர்களின் ஆதிக்கம் கொடி கட்டி பறக்கிறது. மூத்த தலைவர்களுக்கு மரியாதையே இல்லை.  ராகுல் சாதிய அரசியலில் விழுந்து விட்டார்.  மாநிலகாங். தலைமையும் அதையே செய்து வருகிறது என்று காங். மீதும் ராகுல் மீதும் சரமாரியாக குற்றம்சாட்டினார். அப்போதே அவர் பா.ஜ. வில் சேரப்போவது உறுதியாகி விட்டது

இதையடுத்து  பா.ஜ. அலுவலகம் சென்ற அவர் மாநிலத் தலைவர் ஜூதுபாய் வகானி முன்னிலையில் பா.ஜ.வில் சேர்ந்தார். மூத்த தலைவர் பவாலியா  கோலி சமுதாயத்தில் ஒரு துண் போன்றவர் பவாலியா. அகில இந்திய கோலி சமாஜ் தலைவராகவும் உள்ளார். எனவே பா.ஜ.வில் அவர் சேர்ந்தது எங்களுக்கு கிடைத்த சொத்து என்று வகானி கூறினார். உடனடியாக அவரை  அமைச்சர் ஆக்குவதாக முதல்வர் விஜய் ருபானியும் அறிவித்தார். மாலையில் கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் காபினட் அமைச்சராக பவாலியா  பதவி ஏற்றார்.

இதற்கிடையில் பா.ஜ.வில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ.போலா கோகில் என்பவர் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார். இவர் கடந்த ஆண்டு நடந்த ராஜ்யசபா தேர்தலின்போது  காங்கிரசில் இருந்து பா.ஜ.வுக்கு தாவினார். இப்போது மீண்டும் காங்கிரசுக்கே  திரும்பிவிட்டார். ஜஸ்டான் தொகுதியின் அடுத்த எம்.எல்.ஏ. கோகில்தான் என்று எதிர்க்கட்சித் தலைவர் பரேஷ் தனானி கூறினார்.

Label