OUR CLIENTS
அரசு கேபிள் டிவி கட்டணம் குறைப்பு?
அரசு கேபிள் டிவி கட்டணம் குறைப்பு? Posted on 05-Jul-2018 அரசு கேபிள் டிவி கட்டணம் குறைப்பு?

 சென்னை, ஜூலை 5-

கேபிள் டிவி சேவைக்கான மாதக் கட்டணத்தை குறைப்பது சாத்தியமில்லை என தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் கூட்டமைப்பு சமீபத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனத்திடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தது. இதில் சேனல்களுக்காக வசூலிக்கும் கட்டணத்தை குறைக்க வேண்டும். தாலுகாவுக்கு தரை வழி இணைப்புகள் மற்றும் தடையில்லா சிக்னல்கள் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இது குறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தொடங்கிய போது அனாலக் முறையில் 70 ரூபாய்க்கு 100 சேனல்கள் என்ற குறைவான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. தற்போது டிஜிட்டல் முறைக்கு மாறிய பின் 200 சேனல்களுக்கு 150 ரூபாய் மற்றும் 400 சேனல்களுக்கு 210 ரூபாய் என்ற கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதில் 120 ரூபாய் கட்டணத்துடன், ஜி.எஸ்.டி., வரி சேரும் போது 150 ரூபாயாக உயர்கிறது. இது மிக குறைந்த கட்டணம் தான். மேலும் கட்டணம் என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் இதை மாற்றி அமைக்க முடியாது. மேலும் செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டம் பவானி உட்பட 72 பகுதிகளில் வான் வழியில் செல்லும் கேபிள் இணைப்புக்கான கேபிள்கள் அனைத்தும் தரை வழியில் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தாலுகாவில் உள்ள கேபிள் அலுவலகத்திலிருந்து ஆப்பரேட்டர்கள் தங்கள் பகுதிக்கு சில இடங்களில் கேபிள்களை வான் வழியாகத்தான் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Label