OUR CLIENTS
கர்நாடகாவில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தார் குமாரசாமி!
கர்நாடகாவில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தார் குமாரசாமி! Posted on 06-Jul-2018 கர்நாடகாவில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தார் குமாரசாமி!

பெங்களூரு, ஜுலை 6-

கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது முதல் பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். அப்போது ரூ.34 ஆயிரம் கோடி அளவிலான விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். 

கர்நாடகாவில் ஆட்சியைப் பிடித்தால் முதல்வராக பதவியேற்ற 24 மணி நேரத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக பிரச்சாரத்தின் போது குமாரசாமி வாக்குறுதி அளித்தார். ஆனால் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத சூழ்நிலையில், காங்கிரசுடன் மதச்சார்பற்ற ஜனதாதளம் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. குமாரசாமி முதல்வராக பதவியேற்றார்.

ஆனால், குமாரசாமி தான் அளித்த வாக்குறுதியின் படி விவசாய கடனை தள்ளுபடி செய்யவில்லை என்று பா.ஜனதா குற்றம்சாட்டி வந்தது.  இதற்கு பதில் அளித்த குமாரசாமி, தற்போது கூட்டணி ஆட்சி நடந்து வருவதால், விவசாய கடன் தள்ளுபடி பற்றி காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசித்து முடிவு எடுப்பதாக கூறினார். 

இந்த பரபரப்பான சூழ்நிலையில், முதல்வர் குமாரசாமி நேற்று சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது 34 ஆயிரம் கோடி அளவிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். இதனால் விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

Label