OUR CLIENTS
வீடுகள், நிறுவனங்களுக்கு இண்டர்நெட் சேவை!
வீடுகள், நிறுவனங்களுக்கு இண்டர்நெட் சேவை! Posted on 06-Jul-2018 வீடுகள், நிறுவனங்களுக்கு இண்டர்நெட் சேவை!

மும்பை, ஜுலை 6-

ரிலையன்ஸின் 41வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி, ஜியோ மூலம் இந்தியாவில் உள்ள வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு கண்ணாடி இழையினால் அதிவேக இண்டர்நெட் சேவை வழங்கப்படும் என்று அறிவித்தார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 41ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஜியோவின் புதிய திட்டங்கள் மற்றும் புதிய வெளியீடுகளை பற்றி முகேஷ் அம்பானி அறிவித்தார். இந்த பொது கூட்டத்தில், ஜியோ ஜிகாபைபர் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜியோ ஜிகா பைபர் பற்றி பேசுகையில்,”ஜியோ ஜிகாபைபர் திட்டம் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள 1,100 நகரங்களில் அமைந்துள்ள வீடுகள், வணிகர்கள், சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அதிகவேக இண்டர்நெட் வசதி வழங்கப்படும். இந்த இணைப்பை பெறுவதற்கான முன்பதிவு வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்கும்” என்று அறிவித்தார்.

நிரந்தரமாக கண்ணாடி இழையால் அமைக்கப்படும் இதன் மூலம் பெரிய அளவிலான டிவிக்களில் உயர் வரையறை காட்சிகளை காணவும், பலருடன் வீடியோ கான்பரன்சிங் செய்யும் வசதி, குரலால் இயக்கப்படும் மெய்நிகர் உதவி, விர்சுவல் ரியாலிட்டி கேமிங், டிஜிட்டல் ஷாப்பிங் செய்யவும் முடியும்.

ஜியோ ஸ்மார்ட் மற்றும் ஃபீச்சர் போன்களின் புதிய சேவைகளை சேர்த்துள்ளதாக தெரிவித்தார். ஜியோ ஃபீச்சர் போன்களில் இதுவரை பெரும்பாலும் ஜியோ செயலிகள் மட்டுமே இயங்கிவந்த நிலையில் பேஸ்புக், வாட்ஸ்ஆப், யூடியூப் போன்ற செயலிகள் எல்லாம் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகள் ஆகஸ்ட் 15 ஆம் தேதிமுதல் அந்த போனை பெற முன்பதிவு செய்துகொள்ளலாம் என முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

புதிய வகை 2ஆவது ஜெனரேஷன் ஜியோ போனை முன்பதிவு செய்து வெறும் ரூ2,999க்கு பெற்றுக்கொள்ளலாம். பழைய ஜியோ போனையும் ரூ.501 ஐ கொடுத்துவிட்டு ஃபீச்சர் போனை பெற்றுக்கொள்ளலாம் என்று அம்பானி தெரிவித்துள்ளார். 21.5 கோடி வாடிக்கைகளர்களை கொண்ட இந்த ஜியோ, இதுவரை 2.5 கோடி போன்களை விற்பனை செய்துள்ளதாக முகேஷ் அம்பானி பெருமையுடன் கூறினார்.

Label