OUR CLIENTS
காஷ்மீரில் மெகபூபாவுக்கு எதிராக எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி!
காஷ்மீரில் மெகபூபாவுக்கு எதிராக எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி! Posted on 06-Jul-2018 காஷ்மீரில் மெகபூபாவுக்கு எதிராக எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி!

ஸ்ரீநகர், ஜுலை 6-

காஷ்மீரில் அரசியல் சுனாமி வரப்போகிறது என்று மெகபூபா கட்சியின் மூத்த  தலைவர் கூறினார். பத்து எம்.எல்.ஏ.க்கள் வரை கட்சிதாவ தயாராகிவிட்டனர்.

காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பா.ஜ. கூட்டணி அரசு கடந்த மாதம் கவிழ்ந்தது. மெகபூபா மீது பழிசுமத்தி பா.ஜ. விலகிக் கொண்டது. இதனால் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஆனால் சட்டசபை கலைக்கப்படவில்லை அதே சமயத்தில் மற்ற கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுத்து ஆட்சி அமைக்க பா.ஜ.திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

87பேர் கொண்ட சட்டசபையில் மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சிக்க 28எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பா.ஜ.வுக்கு 25பேரும், தேசிய மாநாட்டு கட்சிக்கு 15 பேரும் காங்கிரசுக்க 12 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். ஒரு அரசு அமைக்க 44 பேர்  ஆதரவுதேவை.  

இந்நிலையில் மக்கள் ஜனநாயக கட்சியை பிளவுபடுத்தும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் 3பேர் மெகபூபாவுக்கு எதிராக போர்க் கொடி துக்கி இருந்தனர். இப்போது மேலும் பலர் அணி திரண்டுள்ளதாக தெரிகிறது. முன்னாள் அமைச்சரும் ஷியா தலைவருமான ரசா அன்சாரி தலைமையில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேலான  எம்.எல்.ஏ.க்களை தன் வசம் அவர் வைத்தள்ளதாக தெரிகிறது. இது குறித்து அன்சாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், காஷ்மீர் அரசியல் களத்தை அசைத்துப் பார்க்க சுனாமி வரப்போகிறது. என்னை நம்புங்கள். நான் மட்டும் எதிர்த்து நிற்கவில்லை. என் பின்னால் ஒத்த கருத்துடைய எம்.எல்.ஏ.க்கள் பலரும் உள்ளனர். எங்களை மோசமாக நடத்துகின்றனர். இதற்காக மெகபூபாவை ஏற்கனவே எச்சரித்திருக்கிறோம்.. குடும்ப ஆட்சியே நடத்தி வந்தார் என்று குற்றம் சாட்டினார்.

மெகபூபா ஆட்சியை கவிழ்த்த மத்திய பா.ஜ. அரசு, கட்சித்தலைவர் பதவியில் இருந்தும் அவரை துக்கி வீச முயன்றுள்ளது. சட்டசபையில் சபாநாயகராக பா.ஜ. இருப்பதால் நிச்சயம் எங்கள் கட்சியை உடைப்பது ஒன்றும் கஷ்டம் அல்ல. எங்கள் எம்.எல்.ஏ.க்களில் 15 பேரை இழுக்கவும் பா.ஜ.தயாராகி விட்டது என்று மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார். அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை ஓரணியில் திரட்டும் வேலையில் அன்சாரியும் மக்கள் மாநாடு தலைவர் சஜ்ஜட்லோனும் இறங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Label