OUR CLIENTS
தீபாவளிக்கு ரயிலில் ஊர் செல்ல முன்பதிவு மின்னல் வேகத்தில் காலியான டிக்கெட்டுகள்!
தீபாவளிக்கு ரயிலில் ஊர் செல்ல முன்பதிவு மின்னல் வேகத்தில் காலியான டிக்கெட்டுகள்! Posted on 06-Jul-2018 தீபாவளிக்கு ரயிலில் ஊர் செல்ல முன்பதிவு மின்னல் வேகத்தில் காலியான டிக்கெட்டுகள்!

சென்னை, ஜூலை 6-

நிகழாண்டில் தீபாவளி பண்டிகை நவம்பர் 6-ம் தேதி வருகிறது. இதை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிக்கும் வெளி மாநிலத்தவர்கள் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், தங்களின் சொந்த ஊர்களுக்கு ரயில்கள் அல்லது பேருந்துகளில் பயணம் மேற்கொள்வர். பண்டிகை காலங்களில் ரயில், பேருந்துகளில் சொந்த ஊருக்கு செல்வதில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கமாக உள்ளது. கடைசி நேரத்தில் முன்பதிவு செய்வது, பேருந்து, ரயில் பயணத்தை முன்பதிவின்றி மேற்கொள்வது மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது. இதனால் ரயில் டிக்கெட் முன்பதிவை ஓரிரு மாதங்களுக்கு முன்பே மேற்கொள்ளும் ஆர்வம் பெரும்பாலான பயணிகளிடம் உள்ளது. 120 நாள்களுக்கு முன்பே ரயில் பயணத்துக்கு முன்பதிவு செய்யும் முறையை ரயில்வே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தியது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. தெற்கு ரயில்வேயில் 250&க்கும் மேற்பட்ட டிக்கெட் முன்பதிவு மையங்கள் உள்ளன. 

இந்நிலையில், பயண முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முன்பதிவு டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டன. தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பாண்டியன், நெல்லை, அனந்தபுரி, முத்துநகர் ஆகிய விரைவு வண்டிகளில் டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டன. கோயம்புத்தூர் செல்லும் நீலகிரி விரைவு வண்டி, திருச்சி செல்லும் மலைக்கோட்டை விரைவு வண்டிகளிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் முடிந்துவிட்டன.  நெல்லை, முத்துநகர் உள்ளிட்ட ரயில்கள் காத்திருப்பு பட்டியல் நிலையை எட்டிவிட்டன.

தெற்கு ரயில்வேயில் உள்ள பெரும்பாலான டிக்கெட் முன்பதிவு மையங்களில் பயணிகள் இரவு நேரம் முதல் வரிசையில் காத்திருந்தனர். இதையடுத்து, காலை 8 மணிக்கு தான் முன்பதிவு தொடங்குவதால் ரயில்வே ஊழியர்கள் பயணிகளுக்கு துண்டு சீட்டு கொடுத்து, அதன் அடிப்படையில் வரிசையில் முன்பதிவுகள் செய்யப்பட்டன. 

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் அதிகாரி கூறுகையில், எழும்பூர் ரயில் நிலையத்தில் 200 பயணிகள் வரை இரவு நேரம் முதல் காத்திருந்தனர். அவர்களுக்கு வரிசை எண் கொண்ட துண்டுசீட்டுகள் வழங்கி அந்த வரிசையின்படி முன்பதிவுகள் செய்யப்பட்டதாக கூறினார்.  

நிகழாண்டில் நவம்பர் 6ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளிக்கு 3 நாள்களுக்கு முன்னதாக நவம்பர் 2&ம் தேதி (வெள்ளிக்கிழமை) சொந்த ஊருக்கு புறப்பட்டுச் செல்வதற்கான பயண முன்பதிவு வியாழக்கிழமை (ஜூலை 5) தொடங்கியது.

அரசு, பொதுத் துறைகளில் பணியில் இருப்போர், சனி, ஞாயிறு, இடையில் திங்கள்கிழமை ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொண்டால், மொத்தம் 4 நாள்கள் தொடர்ந்து விடுமுறையை பயன்படுத்திக் கொள்ள இந்த தீபாவளி பண்டிகையின்போது வாய்ப்பு கிடைத்துள்ளது.

நவம்பர் 3ம் தேதி (சனிக்கிழமை) சொந்த ஊருக்கு புறப்பட விரும்புவோர் வெள்ளிக்கிழமை (ஜூலை 6) முன்பதிவு செய்யலாம். நவம்பர் 4ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சொந்த ஊருக்கு புறப்பட விரும்புவோர் சனிக்கிழமை (ஜூலை 7) முன்பதிவு செய்ய வேண்டும். நவம்பர் 5ம் தேதி (திங்கள்கிழமை) ஊருக்குச் செல்ல விரும்புவோர் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 8) டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Label